உயிர்க்கொல்லி கொரோனாவினால் ஏற்படும் நிமோனியா எவ்வளவு கொடூரமானது…? TMP Explained

Read Time:5 Minute, 19 Second

மனித உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் நுரையீரலை இலக்காக கொண்டு தாக்குகிறது. சுவாசக் குழாய் வழியாக நுரையீரலை சென்று அடைவதற்கு தடுப்பு மருந்துகளால் சிகிச்சை அளித்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால், வைரஸ் நுரையீரலின் அடிப்பகுதிக்கு சென்று தன்னுடைய எண்ணிக்கையை பெருக்கி தொற்றினை ஏற்படுத்தி நிமோனியாவை ஏற்படுத்திவிட்டால் உயிர் பிழைப்பது கடினம், பெரும்பாலும் இந்நிலைக்கு சென்றவர்கள் உயிர் பிழைக்கவில்லை என்பது தான் மருத்துவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

ஆஸ்திரேலியா நுரையீரல் அறக்கட்டளையின் தலைவரும், முன்னணி சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் ‘தி கார்டியன்’ பத்திரிக்கைக்கு இது தொடர்பாக அளித்து உள்ள பேட்டியில் எடுத்த உடனேயே கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியாவை தடுக்கக்கூடிய வகையில் எந்த ஒரு சிகிச்சையும் இதுவரை இல்லை என்று கூறியுள்ளார்.

மருத்துவ முறை

வைரஸ் தொற்றுக்கு எதிராக ஏற்கனவே, எல்லா வகையான மருந்துகளையும் முயற்சித்து வருகின்றனர். பலவிதமான வைரஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்போம் என நம்பிக்கையை தெரிவிக்கும் அவர், இந்த நேரத்தில் ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறையையே (மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில் உதவி செய்யும் மருந்துகளை கொண்டு மேற்கொள்ளப்படும் தடுப்பு சிகிச்சையை )மேற்கொள்கிறோம்.

வேறு எந்த பிரத்யேக சிகிச்சையும் இப்போது கைவசம் இல்லை. இது தான் நாங்கள் தீவிர சிகிச்சையில் இருக்கும் மக்களுக்கு வழங்குகிறோம். சுவாசக்கருவியின் மூலமாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும். அவர்களுடைய ஆக்சிஜன் அளவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கிறோம், குணமடையும் போது அவர்களின் நுரையீரல் மீண்டும் இயல்பான வழியில் செயல்பட முடியும் எனக் கூறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ராயல் ஆஸ்ட்ரலேசியன் மருத்துவ கல்லூரியின் தலைவரும், சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் ஜான் வில்சன் பேசுகையில், கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகமாகவே உள்ளது. எனவே, அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில சூழ்நிலைகளில் இதுமட்டும் போதுமானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா ஏற்பட்டால், அது தடையின்றி தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிர் பிழைக்கவில்லை (நிமோனியா என்ற கட்டத்திற்கு சென்றுவிட்டால் உயிரிழப்பு நேரிடுகிறது) எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நிமோனியா எவ்வாறு மாறுபடுகிறது?

என்ற கேள்விக்கு மருத்துவர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் அளித்துள்ள பதிலில், எங்களுக்கு தெரிந்த பெரும்பாலான நிமோனியா பாதிப்புகளுக்கு மருத்துவமனையில் அனுமதிப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சைக்கு பலன் கிடைக்கிறது. ஆனால், கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா மாறுபட்டதாக இருகிறது என்கிறார்.

மருத்துவர் வில்சன், கொரோனா தொற்றினால் ஏற்படும் நிமோனியா கடுமையானதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா சிறிய பகுதிகளுக்கு பதிலாக நுரையீரலின் அனைத்து பகுதியையும் பாதிக்கும் எனக் கூறுகிறார். இதற்கிடையே நிமோனியா என்ற நிலையில் வென்டிலேட்டர்கள் கொண்டு சிகிச்சையளித்தாலும் எந்தஒரு பலனும் தென்படவில்லை என்பது உலகளாவிய மருத்துவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

இவ்வளவு கொடூரமான கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கை மட்டுமே உள்ளது. எனவே, அரசின் விழிப்புணர்வு தகவல்களை பின்பற்றி கொரோனாவிடம் இருந்து நம்மையும், நம் தேசத்தையும் காப்போம்.