கொரோனா போன்ற கொடூர நோய் கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசி எவ்வாறு உருவாக்கப்படுகிறது…? TMP Explained

Read Time:5 Minute, 44 Second

தடுப்பூசி என்பது சில குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. பொதுவாக இவை, ஒரு குறிப்பிட்ட நோயை ஏற்படுத்தும் வைரசிடம் இருந்து உருவாக்கப்படுகிறது. வைரஸ் தொற்றுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முறையில் பொதுவானது முறையாக செயலற்ற தடுப்பூசி முறை இருக்கிறது. இதற்கு இனப்பெருக்கம் செய்ய முடியாத வைரஸ்கள் பயன்படுத்துகிறது.

தொற்றை ஏற்படுத்தும் வைரசில் பாதிப்பை ஏற்படுத்துதல் அல்லது அதனை இறக்க செய்தல் வழியாக மருந்து தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, அம்மை நோய்க்கான தடுப்பூசியில் தட்டம்மை வைரஸ் உள்ளது. அதே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து போலியோ வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சில தடுப்பூசிகளில் நோய் கிருமி அல்லது வைரஸின் ஒரு பகுதி மட்டுமே இடம் பெறுகிறது.

நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் அல்லது குணப்படுத்தும் பெரும்பாலான மருந்துகளை போல் அல்லாமல் தடுப்பூசிகள் அவற்றை தடுக்கும் வகையில் செயல்படுகிறது. கொரோனா வைரஸ் சார்ஸ் வைரஸின் குடும்பத்திலிருந்து வருகிறது, இது ஜலதோஷம் முதல் கடுமையான சுவாச நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ்கள் குடும்பத்தில் இடம்பெறும் வைரஸ்கள் பெரும்பாலும் விலங்குகளிலிருந்து பரவுகின்றன. விலங்குகளில் பரவும் போது தாக்கத்தை ஏற்படுத்தாது. அதுவே மனிதர்களுக்கு செல்லும் போதுபாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த வைரஸ் சார்ஸ், மெர்ஸ், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்று இல்லாமல் தனித்துவமான குணாதிசயங்களை கொண்ட தனித்துவமான வைரசாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள், விஞ்ஞானிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில் எவ்வாறு ஒரு தடுப்பூசி மருந்து உருவாக்கப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ஆய்வு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான வழிமுறையை தெரிந்துக் கொள்ளலாம்.


முதலில் கோழியின் முட்டை செல்கருவில் ஒரு வைரஸ் (கொரோனா வைரஸ் தொற்றில் சம்பந்தப்பட்ட வைரஸ் பயன்படுத்தப்படும்) செலுத்தப்படுகிறது. அங்கு கோழியின் செல்கள் வைரசை இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கிறது.


இவ்வாறு கோழியின் முட்டை செல்களில் இனப்பெருக்கம் செய்யும் வைரஸ், அதற்கு ஏற்றவகையில் தன்னுடைய மரபணுக்களை மாற்றியமைக்கிறது. அதாவது, ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப தன்னுடைய மரபணுக்களை மாற்றும் தன்மையை கொண்டிருக்கும். கோழியின் செல்கள் மனித செல்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. கோழியின் செல்களில் தன்னுடைய மரபணு மாற்றிவிடும் வைரஸ்களினால் மனிதர்களின் செல்களில் இனப்பெருக்கம்,பாதிப்பை ஏற்படுத்த முடியாது.


இப்படி செயற்கையாக உருவாக்கப்படும் வைரஸ்களின் புரதங்கள் மற்றும் பிறப்பொருட்கள் நீக்கப்படுகிறது (வைரசின் இனப்பெருக்கம் செய்யும் தன்னையானது கட்டுப்படுத்தப்படும்). பின்னர் நோயெதிர்ப்பு வேதிப்பொருட்களுடன் செத்த அல்லது பாதி உயிர்ப்புதன்மை கொண்ட வைரஸ் சேர்க்கப்படும். வைரஸ் வெப்பம் அல்லது பார்மால்டிஹைடு மூலம் கொல்லப்படுகிறது.


பின்னர் ஊசி போடுவதற்கு ஏற்ற வகையிலான திரவத்தில் அது சேர்க்கப்படுகிறது.


இந்த இனப்பெருக்கம் செய்ய முடியாத செத்த வைரஸ்கள் மருந்தாக பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஊசியின் மூலம் செலுத்தப்படும் போது அவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது ஏற்கனவே இருக்கும் வைரஸ்கள் இதனை தன்னுள் இழுக்கும் போது சிதைந்து மரணத்தை எதிர்க்கொள்கிறது. மனித உடலில் இருக்கும் வைரஸ்கள் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு கொல்லப்படுகிறது. உதாரணமாக பிணமாகிய வைரஸ்கள் மருந்துகளுடன் மனித உடலில் உயிர்ப்புடன் இருக்கும் வைரஸ் ஏற்கும் போது அது அழிந்து விடுகிறது.

இப்படி தடுப்பூசி மருந்து தயாரிப்பில் வெற்றி கிடைத்தாலும் முக்கியமான வெற்றியென்பது பரிசோதனையில் தான் உள்ளது. எலி, முயல் மற்றும் மனிதர்களிடம் என பல்வேறுபட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும். அப்போது இந்த மருந்து மனிதர்களின் உறுப்புகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று தெரிந்த பின்னர் தான் மருந்தாக பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.