சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று… முடிவெட்டியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…!

Read Time:2 Minute, 46 Second

சென்னையில் வளசரவக்கம் பகுதியில் வசிக்கும் சலூன் கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏப்ரல் 26-ம் தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பகுதியில் கடையை நடத்தி வரும் 36 வயதான அவருக்கு ஏப்ரல் 23-ம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில், அவருக்கு கொரோஒனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு போலீசாருடன் சுகாதார அதிகாரிகளும் தற்போது அவரை சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அந்நபர் தனது சலூன் கடையை திறந்து வைத்திருந்து உள்ளார். மேலும், அப்பகுதியில் வீடுகளுக்கு சென்று தலைமுடியை வெட்டியுள்ளார். மசாஜ் செய்துள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் என இதுவரை வலசரவக்கம், நெற்குண்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகளை சேர்ந்த 32 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சலூன் கடைக்காரர் 25 பேரை தொடர்புக்கொண்டதாக தெரிவித்து உள்ளார். நாங்கல் 32 பேரை அடையாளம் கண்டுள்ளோம். தற்போது, அவர்களின் இரத்த மற்றும் சளி மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி உள்ளோம் என தெரிவித்து உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

சலூன் கடைக்காரர் தினமும் சுமார் 10 முதல் 15 வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளார். அவர்கள் அனைவரையும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். சலூன் கடைக்காரருக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கின் போது சட்ட விரோதமாக கடையை திறந்து வைத்திருத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.