ஒரு கிலோ கோதுமை மாவுக்குள் ரூ.15 ஆயிரம்…! நிவாரண உதவியில் பணத்தை விநியோகித்தாரா? அமீர்கான்.!

Read Time:2 Minute, 20 Second

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு அமிதாப் பச்சன், சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் உதவி வழங்கி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் அவர் வழங்கினார் என டிக்டாக் ஒன்றில் வீடியோ வெளியாகியது.

ஏழை மக்களை மட்டுமே நிவாரணம் அடைய வேண்டும் என சாதாரண பேக்கிங் முறையில் ஒரு கிலோ மாவு பேக் செய்யப்பட்டது. அதனை பலரும் குறைவாக மதிப்பிட்டு வாங்க செல்லவில்லை. ஆனால் அதற்கும் வழியில்லாத பரம ஏழைகள் கோதுமை பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். அவர்கள் வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு சப்பாத்தி போடுவதற்காக பொட்டலத்தை திறந்த போது அதில் ரூ.15 ஆயிரம் இருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டனர். ஒரு கிலோ கோதுமை பாக்கெட் என்றால் உண்மையான ஏழைகள் மட்டுமே வாங்க வருவார்கள் என்று முடிவு செய்து நூதன முறையில் உதவி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் இருந்த விஷயம் அந்த பாக்கெட்டை வினியோகம் செய்த அவரது உதவியாளர்களுக்கு கூட தெரியாது எனவும் தகவல்கள் வெளியாகியது.

இருப்பினும் வீடியோவின் உண்மைத்தன்மையானது உறுதி செய்யப்படவில்லை. இது, உண்மைதான என IANS செய்தி நிறுவனம் அமிர்கானின் உதவியாளர்களிடம் பதிலை நாடியுள்ளது. ஆனால், அவர்கள் தரப்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஏழைகளை மட்டுமே தேவையான உதவி சென்றடைய வேண்டும் என்பதில் சரியான திட்டமாகும் என பலரும் இத்தகவலை பகிர்ந்து மற்றும் பாராட்டி வருகின்றனர்.