கொரோனா ஊரடங்கு: திசையன்விளை – தூத்துக்குடி இணைப்புச்சாலைகள் மூடல்…! மக்கள் அவதி!

Read Time:2 Minute, 46 Second
Page Visited: 412
கொரோனா ஊரடங்கு: திசையன்விளை – தூத்துக்குடி இணைப்புச்சாலைகள் மூடல்…! மக்கள் அவதி!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மாநிலங்கள் இடையேயும், மாவட்டங்கள் இடையேயும் எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லையில் சோதனை சாவடிகள் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டங்களுக்கு இடையே செல்லும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை ஒட்டியுள்ள தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள் கிராமப்புற சாலைகள் வழியாக திசையன்விளை பஜாரில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாகும். தற்போது ஊரடங்கு காலத்திலும் அண்டை மாவட்டத்தவர்களும் வருவதால் திசையன்விளை பஜாரில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக எண்ணிய போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் திசையன்விளைக்கு செல்லும் அனைத்து கிராமப்புற சாலைகளையும் அடைத்து உள்ளனர்.

இதனால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சென்று வாங்கி வந்த அத்தியாவசிய பொருட்களை, தற்போது சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்று சாத்தான்குளத்தில் வாங்க செல்கின்றனர். இதனால் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்பவர்கள் கவலை அடைந்து உள்ளனர். கால்நடைகள் வளர்ப்பவர்களும் தேவையான பொருட்களை வாங்க அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மக்கள் வாகனம் இல்லாமல் கால்நடையாக நடந்து வருபவர்களை அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்ல திசையன்விளை பஜாரில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %