மேற்கு தொடர்ச்சி மலையில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Read Time:1 Minute, 30 Second

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உயிர் வாழ்கின்றன. இந்த வன விலங்குகள் குறித்து ஆண்டுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான கணக்கெடுப்பு பணி கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வனப்பகுதியில் வன விலங்குகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது என தெரிவித்து உள்ளார் என பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது.

வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வருவதால் விலங்குகள் வேட்டையாடப்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. யானை,புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.