இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிவேகம் எடுக்கும் நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.
இந்தியாவில் ஆரம்பக்கட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அது வேகம் எடுப்பது அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்கு அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு மக்கள் செவி சாய்க்காதது மிகப்பெரிய பொறுப்பாக உள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு உடனடியாக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் காலை வெளியிட்ட தகவலின்படி, 24 மணி நேரத்துக்குள் புதியதாக 2,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,553 ஆக அதிகரித்து உள்ளது.
வைரஸ் பாதிப்பால் புதிதாக 72 பேர் உயிரிழந்ததால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,373 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் இதுவரை 11,706 பேர் குணமடைந்துள்ளனர். 29,453 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மராட்டிய மாநிலம்தான் கொரோனாவினால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,974 ஆக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அங்கு 500-க்கும் மேற்பட்டோரை உயிரிழக்கவும் செய்துவிட்டது. குஜராத் மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் 4,549 பேரும், தமிழகத்தில் 3,023 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே பஞ்சாபில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,102 ஆக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் 10-வதாக பஞ்சாப் இணைந்து உள்ளது.
மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 1,583
அசாம் – 43
பீகார் – 503
சண்டிகார் – 94
சத்தீஷ்கார் – 57
டெல்லி – 4,549
குஜராத் – 5,428
அரியானா – 412
இமாச்சலப் பிரதேசம் – 40
ஜம்மு-காஷ்மீர் -701
ஜார்க்கண்ட் – 115
கர்நாடகா – 614
கேரளா – 500
லடாக் – 41
மத்தியப் பிரதேசம் – 2,846
மகாராஷ்டிரா – 12,974
மேகாலயா – 12
மிசோரம் – 1
ஒடிசா – 162
புதுச்சேரி – 8
பஞ்சாப் – 1,102
ராஜஸ்தான் – 2,886
தமிழ்நாடு – 3,023
தெலுங்கானா – 1,082
திரிபுரா – 16
உத்தரகண்ட் – 60
உத்தரபிரதேசம் – 2,645
மேற்கு வங்காளம் – 963.