தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரித்து காணப்பட்டது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரையில் இல்லாத வகையில் இன்று கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதாவது ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், சென்னை மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்து உள்ளது.