‘அவளை கூட்டு பலாத்காரம் செய்வது எளிதானது…’ பதர வைக்கும் டெல்லி ‘டீன் ஏஜ்’ பள்ளி மாணவர்களின் ‘Bois Locker Room’ குரூப் சாட்…!

நேற்றிலிருந்து இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்ட் ஆகி இருக்கிறது #boyslockeroom என்ற ஹாஷ்டேக்.

இதில் படிக்க முடியாதவகையில டெல்லியில் வளரும் ‘டீன் ஏஜ்’ பள்ளி மாணவர்கள் தங்கள் மனதிலிருக்கும் வன்மத்தையும், ஆபாசத்தையும் எப்படி குரூப்பாக சாட் செய்து உள்ளனர் என்ற இன்ஸ்டாகிராம் ஸ்கிரீன்ஷாட்கள் இடம்பெற்றது.

இச்செய்தியை முழுவதாக படிக்கும் முன்னதாக 2014-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் இறுதிக்காட்சியை ஒரு நிமிடம் மனதில் நிறுத்தல் அவசியமாகும்.
தொடர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் அமைச்சரின் மகனும், அவனுடைய கூட்டாளிகளும் விஜய் ஆண்டனியின் கையில் பிணையாக இருப்பார்கள். மகனை விஜய் ஆண்டனியிடம் இருந்து காப்பாற்றிவிட்டால், தன்னுடைய மகனுக்கு 18 வயது இன்னும் ஆகவில்லை என்று எப்படியாவது நீதிமன்றத்தில் காப்பாற்றிவிடலாம் என அமைச்சர் திட்டமிடுவார்.

அப்போது கோபத்தில் உச்சத்திலிருக்கும் போலீஸ் அதிகாரி, விஜய் ஆண்டனியிடம் பேசுகையில், “அமைச்சரின் மகனுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை,” என அழுத்தமாக கூறுவார். இதனையடுத்து தன்னுடைய திட்டப்படி தண்டனையை வழங்கியிருப்பார் விஜய் ஆண்டனி. 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா மிகவும் கொடூரமான முறையில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் ஒரு குற்றவாளி 16 வயதான சிறுவன் என தெரிவிக்கப்பட்டது. மாணவியின் பிறப்புறுப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாத வகையில் சிதைக்கப்பட்டதாகவும், இதில் முக்கிய குற்றவாளியே அந்த சிறுவன்தான் என செய்திகள் வெளியாகியது. ஆனால், சிறுவன் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் தப்பினான்.

சிறுவன் என்ற வார்த்தையே இன்று குற்றம் செய்துவிட்டு தப்பிப்பதற்கான வழியாகவே பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நடந்தை தெளிவாக தெரிந்துக்கொள்வோம். ‘Bois Locker Room’

டெல்லியில் 11, 12 மாணவர்களால் இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற பெயரில் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். இந்த குழுவில் மாணவர்கள் தங்களுடன் உடன் படிக்கும் மாணவிகளையும் மையப்படுத்தி தங்களுடைய வன்மத்தை பகிர்ந்து உள்ளனர். மேலும் குரூப் ஷாட்கள் அனைத்தும் பாலியல் வன்மம் மற்றும் ஆபாசங்களால் நிறைந்து இருக்கிறது.

மாணவிகளின் புகைப்படங்களை ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து தங்களுடைய வன்மத்தினை தீர்த்து உள்ளனர். குரூப் சாட்டில் சொல்ல முடியாத வார்த்தைகளால் தகவல்களை பகிர்ந்துக் கொண்டு உள்ளனர்.

ஒரு உரையாடலில் “ அவளை எங்களால் எளிதாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முடியும். இதுபோன்றவற்றை நம்மால் எளிதாக செய்ய முடியும். அவளுக்கு அழைப்பு விடு. நாங்கள் எங்கு வரவேண்டும் என சொல்,” என பல மாணவர்கள் ஷாட் செய்துள்ளது தெரியவந்து உள்ளது.

இதுபோல் அவளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பலர் வன்மத்தை பகிர்ந்து உள்ளனர். சக மாணவிகளை பற்றியே மிகவும் வன்மமாக பேசியுள்ளனர். இதனையடுத்து தான் போலீஸ் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று டுவிட்டரில் டிரண்ட் ஆனது இவ்விவகாரம். டெல்லி மகளிர் ஆணையமும் நடவடிக்கைக்கு கோரியுள்ளது.

ஒருவன் கைது!

பாலியல் பலாத்காரத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய ஷாட்டிங் அனைத்தும் இருந்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஒருவனை டெல்லி கிரைம் பிரிவு போலீஸ் கைது செய்து உள்ளது. மேலும், பலரை அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் மார்பிங் செய்தது, புகைப்படம் பதிவேற்றியது எல்லாம் சிறுமிகள் எனவும் தெரியவந்து உள்ளது. இச்சம்பவத்தை மாணவி ஒருவரே வெளிப்படுத்தியுள்ளார்.

இது முதல்முறையல்ல கடந்த 2019 டிசம்பரில் மும்பையில் பிரபலமான ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள், தங்கள் பள்ளியில் படிக்கும் சக மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என வாட்ஸ் அப்பில் தங்களுடைய வன்மத்தை பகிர்ந்து இருந்தனர். இது வெளியே தெரியவந்ததும் மாணவர்கள் மீது பள்ளி நடவடிக்கையை மேற்கொண்டது. இளைய தலைமுறையினர் இதுபோன்ற நடவடிக்கையானது மிகவும் ஆபத்தான சூழலை வெளிக்காட்டுகிறது.

இன்று பள்ளியில் கண்டிப்பது எளிதான காரியம் கிடையாது. பிள்ளைகள் வளர்ப்பில் ஆண்-பெண் என வேறுபாடு காட்டும் பெற்றோர்கள், கண்டிப்பில் இருவர் மீதும் சமமாக நடத்தல் அவசியமாகும். எனக்கு கிடைக்காதது என் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என அவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் தெரியாமல் ஆரம்பம் முதலே அவர்களுடைய இஷ்டப்படி இருக்க விடுவது எல்லாவகையில் பிற்காலத்தில் குழந்தைகளை பாதிக்கிறது.

ஒழுக்கம் கற்பித்தல், அன்பு காட்டுதல், கண்டித்தல் என எல்லா பொறுப்புகளும் இன்று பெற்றோர்களிடமே உள்ளது. அதனை அவர்கள் சரியாக செய்தல் அவசியமாகும்.

மேலும் இன்ஸ்டாகிராம் குழு Bios Locker Roomயின் உரையாடல்கள் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மற்றொரு கணக்கு தொடங்கப்பட்ட தாக தெரிகிறது. எனவே சமூகவலை தளங்களை அரசு கண்காணிக்க வேண்டும். மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர் சிறுமியர்கள் சமூகவலைத்தளங்களில் பயன்படுத்த முடியாத அளவிற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் பெற்றோர்களும் அதனை தங்களது பிள்ளைகளிடம் உறுதிப்படுத்த வேண்டும்.

Next Post

மதுபான கடைகள் திறப்பு; கொரோனாவை கட்டுப்படுத்த இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட முயற்சிகளை நீர்க்க செய்யும்...!

Tue May 5 , 2020
மதுபான கடைகள் திறப்பு என்பது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுக்கள் இவ்வளவு நாட்களாக மேற்கொண்ட முயற்சிகளை முற்றிலுமாக நீர்க்கச் செய்துவிடும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு 3.0 நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கில் தற்போது சில கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதில் முக்கியமாக மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. டெல்லி, ஆந்திரா, கர்நாடகம், அசாம் என […]

அதிகம் வாசிக்கப்பட்டவை