இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரே நாளில் 3900 பேருக்கு கொரோனா தொற்று.. சென்னை, கடலூர் உள்பட 5 மாவட்டங்களில் பாதி எண்ணிக்கை பதிவானது…!

Read Time:3 Minute, 40 Second

இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 3900 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,433 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 195 இறப்புகள் பதிவான பின்னர், இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,568 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில், 1,020 பேர் கொடிய கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் இதுவரையில் சிகிச்சையில் 12,726 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 32,138 ஆக உள்ளது. இந்தியாவில் மராட்டியம் மாநிலம் அதிமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. தமிழகத்திலும் வைரஸ் வேகம் அதிகரித்து உள்ளது.

மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 1,650
அசாம் – 43
பீகார் – 538
சண்டிகார் – 102
சத்தீஷ்கார் – 58
டெல்லி – 4,898
குஜராத் – 5,804
அரியானா – 517
இமாச்சலப் பிரதேசம் – 41
ஜம்மு-காஷ்மீர் – 726
ஜார்க்கண்ட் – 115
கர்நாடகா – 651
கேரளா – 500
லடாக் – 41
மத்தியப் பிரதேசம் – 2,942
மகாராஷ்டிரா – 14,541
மேகாலயா – 12
மிசோரம் – 1
ஒடிசா – 169
புதுச்சேரி – 8
பஞ்சாப் – 1,233
ராஜஸ்தான் – 3,061
தமிழ்நாடு – 3,550
தெலுங்கானா – 1,085
திரிபுரா – 29
உத்தரகண்ட் – 60
உத்தரபிரதேசம் – 2,766
மேற்கு வங்காளம் – 1,259

5 மாவட்டங்களில் மட்டுமே பாதி எண்ணிக்கை

இந்தியா முழுவதும் புதியதாக பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் பாதி 5 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என தெரிகிறது.

ஞாயிறு முதல் திங்கள் கிழமை மாலை வரையில் 48 மணி நேரங்களில் பதிவான கொரோனா வழக்குகளின் அடிப்படையில் மும்பை (மராட்டியம்), அகமதாபாத் (குஜராத்), சென்னை (தமிழகம்), கடலூர் (தமிழகம்) மற்றும் ஜோத்பூர் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது என தெரிகிறது.

தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில், சென்னையில் 3 நாள் ஆண் குழந்தை உள்பட 19 குழந்தைகள் மற்றும் 247 பேரும், கடலூரில் 2 குழந்தைகள் உள்பட 122 பேரும் அடங்குவர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1724 ஆக உள்ளது. கடலூரில் 161 ஆக உள்ளது. சென்னையில் மே 3-ம் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1256 ஆக இருந்தது. இது நேற்று மாலை 1724 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று கடலூரில் 30 ஆக இருந்தது 161 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையில் 8351-ல் இருந்து 9302 ஆக உயர்ந்து உள்ளது. அகமதாபாத்தில் 3543-ல் இருந்து 4076 ஆக உயர்ந்து உள்ளது. ஜோத்பூரில் 630-ல் இருந்து 746 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.