வெளி மாநில தொழிலாளர்களுக்கு தெலுங்கானா அரசு செய்யும் உதவி… வீடியோவை பாருங்கள்…!

Read Time:3 Minute, 48 Second
Page Visited: 93
வெளி மாநில தொழிலாளர்களுக்கு தெலுங்கானா அரசு செய்யும் உதவி… வீடியோவை பாருங்கள்…!

இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் மாநிலங்களில் பிற மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வேலையில்லாத காரணத்தினால் வருவாயை இழந்துவிட்ட அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்கள் மூலமாக அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். தெலுங்கானா அரசு வெளிமாநில தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்திலிருந்து ஒரு நாளைக்கு 40 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. ஒருவாரம் இப்படி தொடர்ச்சியாக ரெயில்களை இயக்கி பிற மாநில தொழிலாளர்களை சொந்து ஊருக்கு அனுப்பி வைக்கிறது.

“மாநிலத்தில் 7.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் திருப்பி அனுப்ப தயாராக உள்ளோம். பீகார், உ.பி. முதல்வர்களிடம் இதுதொடர்பாக பேசியுள்ளேன். இன்று (ஏப்ரல்-5) தெலுங்கானாவிலிருந்து பிற மாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 11 சிறப்பு ரெயில்கள் புறப்பட்டு சென்றுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனித்துக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்யும். தெலுங்கானாவில் கட்டுமானப் பணிகள் மற்றும் பிற தொழில்கள் திறக்கப்பட உள்ளதால் பிற மாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று கேட்டுகொண்டுள்ளார். இதற்கிடையே பிற மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தெலுங்கானா அரசு வழி அனுப்பி வைப்பது பாராட்டினை பெற்று உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களுக்கு வெப்பம் சரிபார்க்கப்பட்டு அனுப்படுகிறார்கள். காய்ச்சல், கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ரெயில் நிலையம் மற்றும் ரெயில் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநில அரசு, சொந்த ஊர் செல்வோர்களுக்கு ரெயிலில், உணவு, வாழைப்பழம், தண்ணீர் பாட்டில், முகக்கவசம்,, பிஸ்கட் என அவர்கள் ஊர் சென்றடையும் வரையில் தேவையானவற்றை முன்னதாகவே ரெயிலில் வைத்து வருகிறது.

இதுதொடர்பான வீடியோவை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சந்தோஷ்குமார் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %