உலகம் முழுவதும் இன்று மக்களை வேட்டையாடிவரும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து விட்டது. இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் அதன்முன் மண்டியிடுகிற நிலைதான் இருக்கிறது. இந்த தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் பலவும் ஒன்றிணைந்து போர் தொடுத்து உள்ளன. இருப்பினும் கொரோனா வைரசின் கைதான் ஓங்கி நிற்கிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைபிடிப்பு, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக சோப்பினால் அடிக்கடி கழுவதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையே கை கொடுக்கிறது. ஆனாலும், மக்களின் மெத்தனப்போக்கை கொரோனா தனக்கு சாதகமாக்கி தொற்றினை ஏற்படுத்துகிறது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் 3,820,555 பேரை தாக்கி உள்ளது. பல நாடுகள் இன்னும் கூடுதலான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்குத்தான் பரிசோதனை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு 265,084 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒவ்வொரு நாளும் வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது.
மற்றொரு புறம் நிம்மதியளிக்கும் விஷயமாக இருப்பது, பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,303,029 ஆக உள்ளது என்பது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அதிகளவில் கொண்டு, முதல் இடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா. அங்கு மட்டும் 12 லட்சத்து 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த தொற்றுநோய் தாக்கி உள்ளது. அமெரிக்காவில் இதுவரையில் 74,807 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் ஐரோப்பிய நாடுகள்தான் அணிவகுத்து நிற்கின்றன.
இங்கிலாந்து நாட்டில் பலி எண்ணிக்கை இத்தாலியைவிடவும் அதிகரித்து உள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் வேகம் அதிகரித்ததுடன் உயிரிழப்பும் அதிகரித்து உள்ளது. அங்கு 201,101 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்ட சீனாவை காட்டிலும் பிற நாடுகளில் அதிகமான பாதிப்பு கணப்படுகிறது. வைரசில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படும் அவலம் தொடர்கிறது. கொரோனாவினால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:-
அமெரிக்கா
பாதிப்பு – 1,263,183
உயிரிழப்பு – 74,807
இங்கிலாந்து
பாதிப்பு – 201,101
உயிரிழப்பு – 30,076
இத்தாலி
பாதிப்பு – 214,457
உயிரிழப்பு – 29,684
ஸ்பெயின்
பாதிப்பு – 253,682
உயிரிழப்பு – 25,857
பிரான்ஸ்
பாதிப்பு – 174,191
உயிரிழப்பு – 174,191
பிரேசில்
பாதிப்பு – 126,611
உயிரிழப்பு – 8,588
பெல்ஜியம்
பாதிப்பு – 8,339 உயிரிழப்பு – 8,339
ஜெர்மனி
பாதிப்பு – 168,162
உயிரிழப்பு – 7,275
ஈரான்
பாதிப்பு – 101,650 உயிரிழப்பு – 6,418
நெதர்லாந்து
பாதிப்பு – 41,319
உயிரிழப்பு – 5,204
சீனா
பாதிப்பு – 82,885
உயிரிழப்பு – 4,633
கனடா
பாதிப்பு – 63,496
உயிரிழப்பு – 4,232
ரஷியா, துருக்கி, கனடா உள்ளிட்ட நாடுகளும் அதிகமான பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளன.