இந்தியாவில் 2-வது நாளாக 3 ஆயிரம் பேருக்கு அதிகமாக பாதிப்பு; மொத்த பாதிப்பு 56,342 ஆகவும் உயிரிழப்பு 1,886 ஆகவும் அதிகரிப்பு; மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

Read Time:4 Minute, 29 Second

இந்தியாவில் தொடர்ச்சியாக 2-வது நாளாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு அதிகமாக பாதிப்பு அடைந்து உள்ளனர்.


இந்தியாவில் கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரங்களில் 1,886 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்து உள்ளது.


மராட்டியம், டெல்லி, தமிழகம் இந்த வாரம் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பை கொண்டிருக்கிறது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் 2 கட்டங்களாக சுமார் 40 நாட்கள் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இதனையடுத்து மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டுவர மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்க தொடங்கி உள்ளன. இதற்கிடையே மதுபான கடைகள் உள்பட பிற கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த 6 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் இரண்டாவது நாளாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், 24 மணி நேரத்தில் 3,561 பேர் நோய் தொற்றுக்கு ஆளாக்கி உள்ளனர், புதிதாக 89 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இன்று காலை கடந்த 24 மணி நேரங்களில் 3,392 பேருக்கு புதியதாக பாதிப்பு நேரிட்டு உள்ளது, 103 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியாவில் பாதிப்பு 56,342 ஆகவும், உயிரிழப்பு 1,886 ஆகவும் அதிகரித்து உள்ளது.

இந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மராட்டியம், குஜராத், டெல்லி, தமிழகத்தில் வேகமாக அதிகரித்து உள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 19 எண்ணிக்கை 17,974 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 698 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து காணப்படுகிறது. புதியதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 ஐ எட்டியுள்ளது.

இந்தியாவில் கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 37,916 பேர் சிகிச்சையில் உள்ளனர், 16000-த்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர்.

மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 1,847
அசாம் – 54
பீகார் – 550
சண்டிகார் – 135
சத்தீஷ்கார் – 59
தாதர் நகர் ஹவேலி – 1
டெல்லி – 5,980
குஜராத் – 7,012
அரியானா – 625
இமாச்சலப் பிரதேசம் – 46
ஜம்மு-காஷ்மீர் – 793
ஜார்க்கண்ட் – 132
கர்நாடகா – 705
கேரளா – 503
லடாக் – 42
மத்தியப் பிரதேசம் – 3,252
மகாராஷ்டிரா – 17,974
மேகாலயா – 12
மிசோரம் – 1
ஒடிசா – 219
புதுச்சேரி – 9
பஞ்சாப் – 1,644
ராஜஸ்தான் – 3,427
தமிழ்நாடு – 5,409
தெலுங்கானா – 1,123
திரிபுரா – 65
உத்தரகண்ட் – 61
உத்தரபிரதேசம் – 3,071
மேற்கு வங்காளம் – 1,548