கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக நாடுகளை சீனா ஏமாற்றியது அம்பலம்…!

Read Time:3 Minute, 27 Second

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலாக தென்பட்டது அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த கொலைகார வைரஸ் தொற்று, உலகளாவிய தொற்று நோய் என சென்ற மார்ச் மாதம் 11-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஊரடங்கு நடவடிக்கையை எடுத்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

ஆனால் கொரோனாவின் தாக்கம் குறைந்தப்படாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையானது தொடர்ந்து உயருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு 2 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

இதுவரையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,385,559 ஆக உள்ளது.

இந்த வைரசால், உலகின் வேறு எந்த நாடுகளையும்விட, அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றியபோதும், இதில் அந்த நாடு வெளிப்படையாக நடக்கவில்லை, உண்மைகளை மறைத்து விட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்துப்போய் விட்டது என்றும் அமெரிக்கா கருதுகிறது.

ஆனால், கொரோனா வைரஸ் விவகாரத்தில், சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பக்க பலமாக இருந்து வருகிறது, சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், அந்த அமைப்புக்கான தனது நிதியை நிறுத்திவிட்டது.

சீனாவில் நிலவி வந்த உண்மை கள நிலையை ஆராய்வதற்கும், சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாததை கூறுவதற்கும் மருத்துவ நிபுணர்களை அங்கு கொண்டு செல்வதற்கு உலக சுகாதார நிறுவனம் தனது கடமையை செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், மிகக் குறைவான உயிர்ப்பலியுடன் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவின் மீது பல நாடுகளின் சந்தேகப் பார்வை தொடர்கிறது.

இந்நிலையில் சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த செப்டம்பரிலே ஏற்பட்டு இருக்கிறது, இதனை சீனா மறைத்திருக்கிறது என ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.