அமெரிக்காவை அடுத்து ரஷியாவில் கொரோனா கோரத்தாண்டவம்…! 187,859 பேர் பாதிப்பு.!

Read Time:1 Minute, 49 Second

கொரோனா வைரஸ் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறது.

ஜனவரியில் இருந்து கொரோனாவின் பிடி பிற நாடுகளில் இறுக தொடங்கிய நிலையில் ரஷியா தப்பித்து வந்தது. அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடக்கத்தில் குறைவாக இருந்தது. இதற்கிடையே ஊரடங்கை அமல்படுத்திய ரஷியா, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கொரோனாவின் கோரத்தாண்டவம் ரஷியாவிலும் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 10,669 பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்றோடு தொடர்ந்து 6-வது நாளாக ரஷ்யாவில் ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியா கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 5-வது இடத்திற்கு சென்றுள்ளது. ரஷியாவில் 187,859 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,723 பேர் உயிரிழந்து உள்ளர்.

முதல் 5 நாடுகள் விபரம்:-


அமெரிக்கா

பாதிப்பு: 1,322,154
உயிரிழப்பு: 78,616


ஸ்பெயின்

பாதிப்பு: 260,117
உயிரிழப்பு: 26,299


இத்தாலி

பாதிப்பு: 217,185
உயிரிழப்பு: 30,201


இங்கிலாந்து

பாதிப்பு: 211,364
உயிரிழப்பு: 31,241


ரஷியா

பாதிப்பு: 187,859
உயிரிழப்பு: 1,723