உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பிடியிறுகி வருகிறது. வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, உலக நாடுகள் அனைத்தும் அதன்முன் மண்டியிடுகிற நிலைதான் இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைபிடிப்பு, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக சோப்பினால் அடிக்கடி கழுவதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையே கை கொடுக்கிறது. ஆனாலும், மக்களின் மெத்தனப்போக்கை கொரோனா தனக்கு சாதகமாக்கி தொற்றினை ஏற்படுத்துகிறது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் 4,014,265 பேரை தாக்கி உள்ளது. இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு 276,236 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒவ்வொரு நாளும் வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது.
மற்றொரு புறம் நிம்மதியளிக்கும் விஷயமாக இருப்பது, பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,385,559ஆக உள்ளது என்பது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அதிகளவில் கொண்டு, முதல் இடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா அகும். அங்கு மட்டும் 13 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த தொற்றுநோய் தாக்கி உள்ளது. அமெரிக்காவில் இதுவரையில் 78,616 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் ஐரோப்பிய நாடுகள்தான் அணிவகுத்து நிற்கின்றன.
இங்கிலாந்து நாட்டில் பலி எண்ணிக்கை இத்தாலியைவிடவும் அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்ட சீனாவை காட்டிலும் பிற நாடுகளில் அதிகமான பாதிப்பு கணப்படுகிறது. கொரோனாவினால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:-
அமெரிக்கா
பாதிப்பு – 1,322,154
உயிரிழப்பு – 78,616
இங்கிலாந்து
பாதிப்பு – 211,364
உயிரிழப்பு – 31,241
இத்தாலி
பாதிப்பு – 217,185
உயிரிழப்பு – 30,201
ஸ்பெயின்
பாதிப்பு – 260,117
உயிரிழப்பு – 26,299
பிரான்ஸ்
பாதிப்பு – 176,079
உயிரிழப்பு – 26,230
பிரேசில்
பாதிப்பு – 146,894
உயிரிழப்பு – 10,017
பெல்ஜியம்
பாதிப்பு – 52,011
உயிரிழப்பு – 8,521
ஜெர்மனி
பாதிப்பு – 170,588
உயிரிழப்பு – 7,510
ஈரான்
பாதிப்பு – 104,691
உயிரிழப்பு – 6,541
நெதர்லாந்து
பாதிப்பு – 42,093
உயிரிழப்பு – 5,359
சீனா
பாதிப்பு – 82,887
உயிரிழப்பு – 4,633
கனடா
பாதிப்பு – 66,434
உயிரிழப்பு – 4,569
ரஷியா, துருக்கி, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளும் அதிகமான பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளன.