கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 14-வது இடத்திற்கு சென்றது…!

Read Time:2 Minute, 44 Second

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது என தெரியவந்து உள்ளது.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.

வைரசினால் ஒவ்வொரு நாளும் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக தகவல்களை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் 4,014,265 பேரை தாக்கி உள்ளது. இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு 276,236 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,385,559ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அதிகளவில் கொண்டு, முதல் இடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா அகும். இந்தியா இப்பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவைவிட குறைவான பாதிப்பு கொண்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உயிரிழப்பு கட்டுக்குள் உள்ளது.

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 59,662 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 1,981 ஆகவும் அதிகரித்து உள்ளது.

அதிகமாக பாதிப்பை கொண்டுள்ள 15 நாடுகள் பட்டியல்:-


அமெரிக்கா

பாதிப்பு: 1,322,154
உயிரிழப்பு: 78,616


ஸ்பெயின்

பாதிப்பு: 260,117
உயிரிழப்பு: 26,299


இத்தாலி

பாதிப்பு: 217,185
உயிரிழப்பு: 30,201


இங்கிலாந்து

பாதிப்பு: 211,364
உயிரிழப்பு: 31,241


ரஷியா

பாதிப்பு: 187,859
உயிரிழப்பு: 1,723


பிரான்ஸ்

பாதிப்பு: 176,079
உயிரிழப்பு: 26,230


ஜெர்மனி

பாதிப்பு: 170,588
உயிரிழப்பு: 7,510


பிரேசில்

பாதிப்பு: 146,894
உயிரிழப்பு: 10,017


துருக்கி

பாதிப்பு: 135,569
உயிரிழப்பு: 3,689


ஈரான்

பாதிப்பு: 104,691
உயிரிழப்பு: 3,689


சீனா

பாதிப்பு: 82,887
உயிரிழப்பு: 4,633


கனடா

பாதிப்பு: 66,434
உயிரிழப்பு: 4,569


பெரு

பாதிப்பு: 61,847
உயிரிழப்பு: 1,714


இந்தியா

பாதிப்பு: 59,695
உயிரிழப்பு: 1,985


பெல்ஜியம்

பாதிப்பு: 52,011
உயிரிழப்பு: 8,521