இந்தியாவில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு வேகம்…! 4 மாநிலங்களில் மட்டும் 41 ஆயிரம் பேர் பாதிப்பு…!

Read Time:3 Minute, 14 Second

இந்தியாவில் கொரோனாவால் 62,939 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்து உள்ளது.


மராட்டியம் (20,228 பேர் பாதிப்பு), குஜராத் (7,796), தமிழகம் (6,535), டெல்லி (6,542) ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளன.


சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்தியாவில் 41,472 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19,357 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரசால் தினசரி ஏற்படும் பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி காலை வெளியான புள்ளி விவரத்தில் ஒரே நாளில் இந்த வைரஸ் தொற்றால் 3,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 128 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,939 ஆகவும், பலி எண்ணிக்கை 2,109 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 19,357 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 41,472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒருநாளில் 95,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய இதுவரை மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மராட்டியம் (20,228 பேர் பாதிப்பு), குஜராத் (7,796), தமிழகம் (6,535), டெல்லி (6,542) உள்ளன. இந்த 4 மாநிலங்களில் மட்டுமே 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய குழு விரைவில் செல்ல உள்ளது. இதற்கிடையே இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 1930
அருணாச்சல பிரதேசம் – 1
அசாம் – 63
பீகார் – 591
சண்டிகர் – 169
சத்தீஷ்கார் – 59
தாதர் நகர் ஹவேலி – 1
டெல்லி – 6542
கோவா – 7
குஜராத் – 7796
அரியானா – 675
இமாச்சலப் பிரதேசம் – 50
ஜம்மு-காஷ்மீர் – 836
ஜார்க்கண்ட் – 156
கர்நாடகா – 794
கேரளா – 505
லடாக் – 42
மத்தியப் பிரதேசம் – 3614
மகாராஷ்டிரா – 20228
மணிப்பூர் – 2
மேகாலயா – 13
மிசோரம் – 1
ஒடிசா – 294
புதுச்சேரி – 9
பஞ்சாப் – 1762
ராஜஸ்தான் – 3708
தமிழ்நாடு – 6535
தெலுங்கானா – 1163
திரிபுரா – 134
உத்தரகண்ட் – 67
உத்தரபிரதேசம் – 3373
மேற்கு வங்காளம் – 1786