இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியது… தமிழகம் 3-வது இடம்…! மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

Read Time:3 Minute, 47 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரையில் இல்லாத வகையில் ஒரே நாளில் 4,213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் வாரியாக அதிகமான பாதிப்பை கொண்ட பட்டியலில் டெல்லியை பின்னுக்கு தள்ளியுள்ளது.


இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவினால் தினசரி புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி காணப்பட்டது.

இந்நிலையில் முதல் முறையாக இந்த எண்ணிக்கையானது 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் நேற்று முதல் இன்று காலை வரையில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக 97 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்து உள்ளது.

நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது. 20,916 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 44,029 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் மற்றும் குஜராத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. இதுவரையில் மூன்றாவது இடத்தில் டெல்லியே இருந்து வந்தது. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்து உள்ளது.

மராட்டியம் (22,171 வழக்குகள்), குஜராத் (8194), தமிழ்நாடு (7204), டெல்லி (6923) ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாக உள்ளன.

கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது.

மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33

ஆந்திரா -1980

அருணாச்சல பிரதேசம் – 1

அசாம் – 63

பீகார் – 696

சண்டிகர் – 169

சத்தீஷ்கார் – 59

டெல்லி – 6923

கோவா – 7

குஜராத் – 8194

ஹரியானா – 703

இமாச்சலப் பிரதேசம் – 55

ஜம்மு-காஷ்மீர் – 861

ஜார்க்கண்ட் – 157

கர்நாடகா – 848

கேரளா – 512

லடாக் – 42

மத்தியப் பிரதேசம் – 3614

மகாராஷ்டிரா – 22171

மணிப்பூர் -2

மேகாலயா – 13

மிசோரம் – 1

ஒடிசா – 377

புதுச்சேரி – 9

பஞ்சாப் – 1823

ராஜஸ்தான் – 3814

தமிழகம் – 7204

தெலுங்கானா – 1196

திரிபுரா – 150

உத்தரகண்ட் – 68

உத்தரபிரதேசம் – 3467

மேற்கு வங்காளம் – 1939