முக்கிய நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது; தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயம்…!

Read Time:4 Minute, 42 Second

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ஊரங்கு காலம் அதிகரிக்க அதிகரிக்க ரெயில்வேயும் பயணிகள் ரெயிகல்களை இயக்குவதை தவிர்த்தது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ம் தேதி முதல் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரெயில் போக்குவரத்து நாளை (மே 12) முதல் மீண்டும் தொடங்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்களை பார்க்கலாம்.


ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் நாளையில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது நாளை டெல்லியில் இருந்து 15 ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன.


இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவரம், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு திரும்பும்.


இந்த ரெயில்களில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள முகவரியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். இதற்கான முன்பதிவு இன்று (மே 11) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.


ரெயில் நிலையங்களில் உள்ள கவுண்ட்டர்களில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. அவை மூடப்பட்டு இருக்கும். மேலும், ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட்டும் வழங்கப்படாது.


டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.


பயணிகளுக்கு ரெயில் நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படும். பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


ரெயில் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


கொரோனா நோய்த் தொற்று வார்டாக மாற்றவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் சிறப்பு ரெயிலுக்காகவும் 20 ஆயிரம் பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனவே போதிய பெட்டிகள் கிடைப்பதை பொறுத்து பயணிகளுக்காக மேலும் பல சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்க தொடங்கும்.


மூத்த குடிமக்கள் ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.


இந்த ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகள் மற்றும் கைத்தறி வழங்கப்படக்கூடாது. வெப்பநிலை சற்று அதிகமாக வைக்கப்படும். மேலும், புதிய காற்று ரெயில் பெட்டிக்குள் எப்போதும் இருக்க தேவ்வையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணியாளர்கள் மூலமாக உணவுப்பொருள் வழங்கும் சேவையிருக்காது.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %