இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது… 24 மணி நேரத்தில் 3,604 பேர் பாதிப்பு, 87 பேர் உயிரிழப்பு..!

Read Time:3 Minute, 59 Second
Page Visited: 87
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது… 24 மணி நேரத்தில்  3,604 பேர் பாதிப்பு, 87 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக உயர்ந்து உள்ளது. உயிழப்பு எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்து உள்ளது.


மராட்டியம், தமிழகம், குஜராத் மற்றும் டெல்லி மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.


நாடு முழுவதும் இந்த வைரஸ் பிடியில் சிக்கி சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 22,455 ஆக உயர்ந்து உள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தனது பரவும் வேகத்தை அதிகரித்து வருகிறது என்பதை அரசின் புள்ளி விபரங்கள் தெரிவித்து வருகிறது.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அப்போது, அதில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளைவிடவும் தற்போது கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்படுவதாலேயே பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேரங்களில் நேரிட்ட பாதிப்பு விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில், 24 மணி நேரத்துக்குள் கொரோனா 3,604 பேரை தாக்கியுள்ளது, 87 பேரின் உயிரையும் பறித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,756 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2293 ஆகவும் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்த மாநிலங்களாக மராட்டியம் (பாதிப்பு: 1230, உயிரிழப்பு: 36), தமிழகம் (பாதிப்பு: 798, உயிரிழப்பு: 6), குஜராத் (பாதிப்பு: 347, உயிரிழப்பு: 20) மற்றும் டெல்லி (பாதிப்பு: 310) உள்ளது.

நாடு முழுவதும் இந்த வைரஸ் பிடியில் சிக்கி சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 22,455 ஆக உயர்ந்துள்ளது. 46,008 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33

ஆந்திரா – 2,018

அசாம் – 65

பீகார் – 747

சண்டிகார் – 174

சத்தீஷ்கார் – 59

தாதர் நகர் ஹவேலி – 1

டெல்லி – 7,233

குஜராத் – 8,541

அரியானா – 730

இமாச்சலப் பிரதேசம் – 59

ஜம்மு-காஷ்மீர் – 879

ஜார்க்கண்ட் – 160

கர்நாடகா – 862

கேரளா – 519

லடாக் – 42

மத்தியப் பிரதேசம் – 3,785

மராட்டியம் – 23,401

மேகாலயா – 13

ஒடிசா – 414

புதுச்சேரி – 12

பஞ்சாப் – 1,867

ராஜஸ்தான் – 3,988

தமிழ்நாடு – 8,002

தெலுங்கானா – 1,275

திரிபுரா – 152

உத்தரகண்ட் – 68

உத்தரபிரதேசம் – 3,573

மேற்கு வங்காளம் – 2,063

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %