இந்தியாவில் தாக்குதலை வலுப்படுத்துகிறது கொரோனா வைரஸ், பாதிப்பு 74,281 ஆகவும், சாவு 2,415 ஆகவும் அதிகரிப்பு.!

Read Time:3 Minute, 32 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் தன்னுடைய தாக்குதலை வலுப்படுத்துகிறது என்று அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


மராட்டியம், குஜராத், தமிழகம், டெல்லி ஆகிய 4 மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன.


இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,281 ஆகவும், சாவு 2,415 ஆகவும் அதிகரித்துள்ளது.


இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 74 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கிவிட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கடந்த 24 மணி நேரங்களில் புதிதாக 3,525 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 122 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,756-ல் இருந்து 74,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24,385 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 47,480 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

347 அரசு ஆய்வகங்கள் மற்றும் 137 தனியார் ஆய்வகங்கள் மூலம் சோதனை திறன் ஒரு நாளைக்கு 1 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை சுமார் 18 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சக தரவுகளின்படி, அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புடன் 24,427 மராட்டியம் முதலில் உள்ளது. அதனைத் தொடர்ந்து குஜராத் (8,903), தமிழகம் (8,718), டெல்லி (7,639), ராஜஸ்தான் (4,126), மத்தியப் பிரதேசம் (3,986) மற்றும் உத்தரபிரதேசம் (3,664) உள்ளன.

நாடு முழுவதும் பதிவான 2,415 இறப்புகளில், மராட்டியம் அதிக எண்ணிக்கை இறப்புகளை 921 கொண்டிருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக குஜராத் (537), மத்தியப் பிரதேசம் (225), மேற்கு வங்கம் (198), ராஜஸ்தான் (117), டெல்லி (86), உத்தரப்பிரதேசம் (82), தமிழ்நாடு (61), ஆந்திரா (46) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33

ஆந்திரா – 2090

அருணாச்சல பிரதேசம் – 1

அசாம் – 65

பீகார் – 831

சண்டிகார் – 187

சத்தீஷ்கார் – 59

தாதர் நகர் ஹவேலி – 1

டெல்லி – 7639

கோவா – 7

குஜராத் – 8903

அரியானா – 780

இமாச்சலப் பிரதேசம் – 65

ஜம்மு-காஷ்மீர் – 934

ஜார்க்கண்ட் – 172

கர்நாடகா – 925

கேரளா – 524

லடாக் – 42

மத்தியப் பிரதேசம் – 3986

மராட்டியம் – 24427

மணிப்பூர் – 2

மேகாலயா – 13

மிசோரம் – 1

ஒடிசா – 437

புதுச்சேரி – 13

பஞ்சாப் – 1914

ராஜஸ்தான் – 4126

தமிழ்நாடு – 8718

தெலுங்கானா – 1326

திரிபுரா – 154

உத்தரகண்ட் – 69

உத்தரபிரதேசம் – 3664

மேற்கு வங்காளம் – 2173