கொரோனா நிவாரண நிதி… சக்தி மசாலா நிறுவனம் 2-ம் கட்டமாக ரூ.5.10 கோடி வழங்கியது!

Read Time:2 Minute, 8 Second

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 2-ம் கட்டமாக ரூ.5.10 கோடி வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக சக்தி மசாலா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவு பொருட்களை விற்பனை செய்யும் சக்தி மசாலா நிறுவனம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அமைந்து உள்ள தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அம்முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு கடந்த மார்ச் 30-ம் தேதி தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது.

கடந்த 11- ம் தேதி அன்று 2-வது முறையாக ரூ.5.10 கோடியை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளது.

இதுவரையில் சக்தி மசாலா நிறுவனம் முதல்-அமைச்சரின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் ரூ.10.10 கோடியை நிவாரண நிதியாக வழங்கி அரசுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் உறுதுணையாக உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறது.

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை சக்தி மசாலா நிறுவனம் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %