உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தன் ஆதிக்கத்தை செலுத்து வருகிறது.
இன்று வரை கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைபிடிப்பு, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக சோப்பினால் அடிக்கடி கழுவதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையே கை கொடுக்கிறது. ஆனாலும், மக்களின் மெத்தனப்போக்கை கொரோனா தனக்கு சாதகமாக்கி தொற்றினை ஏற்படுத்துகிறது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் 4,526,934 பேரை தாக்கி உள்ளது. இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு 303,407 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒவ்வொரு நாளும் வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. உலக அளவில் பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,704,278 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அதிகளவில் கொண்டு, முதல் இடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா அகும். அங்கு மட்டும் 14 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த தொற்றுநோய் தாக்கி உள்ளது. அமெரிக்காவில் இதுவரையில் 86,912 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் ஐரோப்பிய நாடுகள்தான் அணிவகுத்து நிற்கின்றன.
இங்கிலாந்து நாட்டில் பலி எண்ணிக்கை இத்தாலியைவிடவும் அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்ட சீனாவை காட்டிலும் பிற நாடுகளில் அதிகமான பாதிப்பு கணப்படுகிறது. தொடக்கத்தில் ஊரடங்கு காரணமாக பாதிப்பை கட்டுப்படுத்திய இந்தியாவும் பாதிப்பில் சீனாவை நெருங்கி உள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி இந்தியா 12 வது இடத்தில் உள்ளது. கொரோனாவினால் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:-
அமெரிக்கா
பாதிப்பு – 1,457,593
உயிரிழப்பு – 86,912
ஸ்பெயின்
பாதிப்பு – 272,646
உயிரிழப்பு – 27,321
ரஷியா
பாதிப்பு – 252,245
உயிரிழப்பு – 2,305
இங்கிலாந்து
பாதிப்பு – 233,151
உயிரிழப்பு – 33,614
இத்தாலி
பாதிப்பு – 223,096
உயிரிழப்பு – 31,368
பிரேசில்
பாதிப்பு – 203,165
உயிரிழப்பு – 13,999
பிரான்ஸ்
பாதிப்பு – 178,870
உயிரிழப்பு – 27,425
ஜெர்மனி
பாதிப்பு – 174,975
உயிரிழப்பு – 7,928
துருக்கி
பாதிப்பு – 144,749
உயிரிழப்பு – 4,007
ஈரான்
பாதிப்பு – 114,533
உயிரிழப்பு – 6,854
சீனா
பாதிப்பு – 82,933
உயிரிழப்பு – 4,633
இந்தியா
பாதிப்பு – 82,052
உயிரிழப்பு – 2,649.