இந்தியாவில் 14 மாநிலங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை – மத்திய அரசு

Read Time:2 Minute, 52 Second
Page Visited: 83
இந்தியாவில் 14 மாநிலங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை – மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் அதிகரித்து காணப்படுகிறது. மத்திய அரசும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று (மே 14) டெல்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது, கோபாஸ்-6800 என்ற நவீன பரிசோதனை எந்திரத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த எந்திரத்தின் மூலம் 24 மணி நேரத்தில் 1,200 மாதிரிகளை பரிசோதிக்க முடியும்.

பின்னர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. 14 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிப்பு எதுவும் இல்லை என்று எனக் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகும் கால அளவு, முன்பு 11.1 நாட்களாக இருந்தது. கடந்த 3 நாட்களில், இந்த கால அளவு 13.9 நாட்களாக வேகம் குறைந்து உள்ளது.

மேலும், குஜராத், ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா, சத்தீஷ்கார், அந்தமான், சண்டிகார், அருணாசலபிரதேசம், கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், தாத்ரா நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதுபோல், டாமன்-டையு, சிக்கிம், நாகாலாந்து, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இதுவரையில் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில், கொரோனா இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில், குணமடையும் விகிதம் 32.83 சதவீதத்தில் இருந்து 33.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதுவரையில் 26 ஆயிரத்து 235 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது தினசரி ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து வருகிறோம். இதுவரை 20 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தி, இன்றுடன் ஒரு மைல்கல் சாதனை படைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %