கொரோனா சிகிச்சைக்கு டிரம்ப் சொன்ன மலேரியா மாத்திரை ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ ஒன்னுக்கும் உதவாது…!

Read Time:3 Minute, 49 Second
Page Visited: 118
கொரோனா சிகிச்சைக்கு டிரம்ப் சொன்ன மலேரியா மாத்திரை ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ ஒன்னுக்கும் உதவாது…!

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பெரியளவில் நேர்மறையான தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை மாறாக பிற உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தியது என்று இரண்டு புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் தற்காப்புக்காக ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

இப்படிதான், மலேரியா காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சையின்போது தரக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா நோயாளிகளுக்கு வைரசை கொல்வதில் பலன் அளிக்கிறது என்ற தகவல் பரவியது. ஆனால், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் தடுப்பு நடவடிக்கையாக இம்மாத்திரைகளை வாங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டின. உலக அளவில் இம்மாத்திரிகளுக்கு பெரும் விளம்பர தூதராக இருந்தவர் யாரென்றால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்தான். அவர்தான், இம்மாத்திரைகள் பயனளிக்கிறது என்று முதலில் கொழுத்திப்போட்டவர்.

இதனையடுத்து பலரும் இதனை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் விஞ்ஞானிகள் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிசோதனையின் அடிப்படையிலே பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கையை விடுத்தனர். இம்மாத்திரைகளால் இதய கோளாறு நேரிடும் என்ற எச்சரிக்கை பல சுகாதாரத்துறை நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டது.

ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் (JAMA) கட்டுரையில் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவில், கொரோனாவுக்கு எதிராக டிரம்ப் குறிப்பிட்ட அதிசய மருந்து வேலை செய்யாது. மாறாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது என தெரியவந்தது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள், இம்மாத்திரைகளால் கொரோனா சிசிக்கையில் அப்படி எந்தஒரு பெரிய மாற்றமும் தென்படவில்லை எனக் கூறியுள்ளனர் BMJ பத்திரிக்கை கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு ஆராய்ச்சி ஆய்வு கட்டுரையில் சீன ஆராய்ச்சியாளர்களும் இதனையே கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் மலேரியா மாத்திரைகளை கொரோனா சிகிச்சையளிக்க முடியும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று எச்சரித்தது. மேலும், சில ஆய்வுகள் நோயாளிகளுக்கு கடுமையான மற்றும் ஆபத்தான இதய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது என எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %