இந்தியாவில் நேற்று காலை 8 மணி முதல் இன்று (மே 16) காலை 8 மணி வரை கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் இந்த 24 மணி நேரத்துக்குள் 3,970 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், புதிதாக 103 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,940 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,752 ஆகவும் உயர்ந்துள்ளது.
முதல்முறையாக வைரஸ் தொற்று ஏற்பட்ட சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,941 ஆக இருக்கிறது. இதைவிடவும் இந்தியாவில் பாதிப்பு அதிகமாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரங்களில் மராட்டியத்தில் மட்டுமே ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 434 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 29,100 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 10,108 பேரும், குஜராத்தில் 9,931 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 8,895 ஆக உள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து காணப்படுகிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 576 ஆக இருக்கிறது. இந்தியாவில் மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் கொரோனா நூற்றுக்கும் மேற்பட்டவர்களை உயிரிழக்க செய்துள்ளது.
மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 2,307
அசாம் – 90
பீகார் – 1,018
சண்டிகார் – 191
சத்தீஷ்கார் – 66
தாதர் நகர் ஹவேலி – 1
டெல்லி – 8,895
கோவா – 15
குஜராத் – 9,931
அரியானா – 818
இமாச்சலப் பிரதேசம் – 76
ஜம்மு-காஷ்மீர் – 1,013
ஜார்க்கண்ட் – 203
கர்நாடகா – 1,056
கேரளா – 576
லடாக் – 43
மத்தியப் பிரதேசம் – 4,595
மராட்டியம் – 29,100
மணிப்பூர் – 3
மேகாலயா – 13
ஒடிசா – 672
புதுச்சேரி – 13
பஞ்சாப் – 1,935
ராஜஸ்தான் – 4,727
தமிழ்நாடு – 10,108
தெலுங்கானா – 1,454
திரிபுரா – 156
உத்தரகண்ட் – 82
உத்தரபிரதேசம் – 4,057
மேற்கு வங்காளம் – 2,461