தமிழகத்தில் இன்று 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 81 பேர் மராட்டியம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா வைரஸ் தொற்று காராணமாக மேலும் 4 பேர் உயிழந்து உள்ளனர். எனவே, கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பில் முதலிடம் இருக்கும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிப்புக்கு உள்ளான 639 பேரில் 558 தமிழகத்தில் இருந்தவர்கள். மீதம் 81 பேர் (மராட்டியம் -73, கர்நாடகா – 2, ராஜஸ்தான் -2, தெலுங்கானா – 3, ஆந்திரா -1) பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் கொரோனா தாக்குதல் புதிய உச்சம், பாதிப்பு 96 ஆயிரத்தையும், சாவு 3 ஆயிரத்தையும் தாண்டியது...

Mon May 18 , 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் தொடக்கத்தில் தினசரி கொரோனா வைரஸ் தாக்குதல் குறைவாகவே காணப்பட்டட்து. […]

அதிகம் வாசிக்கப்பட்டவை