கொரோனாவின் பிடியில் வலுவாக சிக்கியிருக்கும் பிரேசிலில் சாவு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200- க்கும் அதிகமான நாடுகளில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4,743,444
பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், வைரஸ் தொற்றுக்கு இதுவரை 313,704
பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்கா கடுமையான பாதிப்பை கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவினாலும் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் அதனுடைய தாக்கமானது கடும் வேகம் கொண்டிருந்தது.

இந்நிலையில் இவ்வரிசையில் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் சிக்கியிருக்கிறது. பிரேசில் கடுமையான கொரோனா வைரஸ் பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 233,511 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 15,662 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 89,672 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி பிரேசில் தற்போது ஜந்தாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் ஸ்பெயினும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும், நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன.

Next Post

செல்போன்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து...!

Sun May 17 , 2020
செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது என ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் எச்சரிக்கையை விடுத்து உள்ளனர். உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, சுமார் 46 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி உள்ள கொரோனா வைரஸ், 3 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் வல்லரசு நாடான அமெரிக்கா ஆட்டம் கண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கும் படையெடுத்த கொரோனா அங்கும் லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி […]

அதிகம் வாசிக்கப்பட்டவை