இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்திவிட்டது. நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,872 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று காலை முதல் இன்று (மே 17) காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா 4,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,940-ல் இருந்து 90,927 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தி செல்கிறது.
இந்தியாவில் இதுவரையில் இல்லாத வண்ணம் ஒருநாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 4,987 ஆக அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 53946 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 34,108 குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மராட்டியமே தொடர்ந்து இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் மட்டும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,706 ஆக உள்ளது. மும்பை, டெல்லி, அகமதாபாத், சென்னை மற்றும் புனே ஆகிய பல பெரிய நகரங்கள் இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் பெரும்பாலனவற்றை கொண்டுள்ளன.
500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மூலம் நாட்டில் சோதனை திறன் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் சோதனைகள் அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது இடத்தில் இருந்த தமிழகத்தில் பாதிப்பு 10,585 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் 10,988 பேரும், தேசிய தலைநகர் டெல்லியில் 9,333 பேரும், ராஜஸ்தானில் 4,960 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,789 பேரும், உத்தரபிரதேசத்தில் 4,258 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 2355
அருணாச்சல பிரதேசம் – 1
அசாம் -92
பீகார் – 1179
சண்டிகார் – 191
சத்தீஷ்கார் – 67
தாதர் நகர் ஹவேலி – 1
டெல்லி – 9333
கோவா – 17
குஜராத் – 10988
அரியானா – 887
இமாச்சலப் பிரதேசம் – 78
ஜம்மு-காஷ்மீர் – 1121
ஜார்க்கண்ட் – 217
கர்நாடகா – 1092
கேரளா – 587
லடாக் – 43
மத்தியப் பிரதேசம் – 4789
மகாராஷ்டிரா – 30706
மணிப்பூர் – 7
மேகாலயா – 13
மிசோரம் – 1
ஒடிசா – 737
புதுச்சேரி – 13
பஞ்சாப் – 1146
ராஜஸ்தான் – 4960
தமிழ்நாடு – 10585
தெலுங்கானா – 1509
திரிபுரா – 167
உத்தரகண்ட் – 88
உத்தரபிரதேசம் – 4258
மேற்கு வங்காளம் – 2576