வங்கக்கடலில் ‘அம்பான்’ புயல் இன்று தீவிரம் அடைகிறது… தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Read Time:2 Minute, 36 Second
Page Visited: 127
வங்கக்கடலில் ‘அம்பான்’ புயல் இன்று தீவிரம் அடைகிறது… தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

அந்தமான் பகுதியில் வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக உருவாகியது. இந்த புயல் இன்று (மே 17) தீவிரம் அடைகிறது, இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் செய்தியாளர்களிடம் மே 16-ம் தேதி பேசுகையில், வங்க கடலில் ‘அம்பான்’ புயல் இன்று மாலை தீவிரம் அடைந்து வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகருகிறது. நாளை புயல் வடக்கு, வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும்.

இதனால் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 160 கிலோ மீட்டர் வரை காற்று வீசும். வருகிற 19-ம் தேதி 180 கிலோ மீட்டர் வரையிலும், 20-ம் தேதி 190 கிலோ மீட்டர் வரையிலும் சூறாவளி காற்று வீசலாம். எனவே, இந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள இந்த புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையிலும் மழை பெய்யக்கூடும். புயல் கடந்து செல்லும்போது, தமிழகத்தில் வெப்ப காற்று உள்ளே புகும். எனவே, வட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 20-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படும் என தெரிவித்து உள்ளார்.

வங்காள விரிகுடாவில் கடுமையான புயல் தீவிரமடைந்து வருகிறது, மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %