செல்போன்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து…!

Read Time:4 Minute, 34 Second
Page Visited: 136
செல்போன்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து…!

செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது என ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் எச்சரிக்கையை விடுத்து உள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, சுமார் 46 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி உள்ள கொரோனா வைரஸ், 3 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது.

இந்த வைரஸ் தொற்றால் வல்லரசு நாடான அமெரிக்கா ஆட்டம் கண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கும் படையெடுத்த கொரோனா அங்கும் லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. வைரஸ் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வைரசுக்கு எதிரான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், அதன் கையே ஓங்கியுள்ளது. இந்நிலையில் வைரஸ் எப்படியெல்லாம் பரவுகிறது மற்றும் ஒரு பொருளின் மேல் பரப்பில் எவ்வளவு நேரம் உயிர்வாழ்கிறது என்பது தொடர்பான தகவல்களும் அதிர்ச்சியளித்து வருகிறது.

தற்போது செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது என ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் எச்சரிக்கையை விடுத்து உள்ளனர்.

ராய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் குடும்ப மருத்துவத்துறை மருத்துவர்கள் 5 பேர் BMJ Global Health Journal சர்வதேச மருத்துவ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், செல்போனின் மேற்பரப்பு வாயிலாக கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பு கொண்டது. செல்போன் பேசும்போது, நமது முகம், காது, கண், வாய் ஆகியவற்றை அதனை ஒட்டியே வைத்திருப்போம். எனவே, எளிதாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.

என்னதான் கைகளை முறையாக கழுவினாலும், செல்போன், கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். மருத்துவமனையொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு ஒருதடவை சுகாதார பணியாளர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. ஏறத்தாழ 100 சதவீதம் பேரும் செல்போன் பயன்படுத்தினாலும், 10 சதவீதம்பேர் மட்டுமே அவ்வப்போது செல்போனை துடைக்கின்றனர்.

சுகாதார பணியாளர்களுக்கு முக கவசம், பாதுகாப்பு ஆடைகள் போல், செல்போனும் உடலுடன் ஒட்டியே இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு உபகரணங்களை துவைப்பதுபோல், செல்போன்களை துவைத்து பயன்படுத்த முடியாது. செல்போனில் இருக்கும் வைரஸ் எல்லாமே கைக்கு மாறும். மேலும், செல்போன்கள், பாக்டீரியாக்கள் குடியிருக்க வாய்ப்பானவை. மேலும், கை சுத்தத்தாலும் அதை தடுக்க முடியாது.

எனவே, மருத்துவமனைகளில் தகவல் பரிமாற்றத்துக்கு செல்போன்கள் பயன்பாட்டை தவிர்க்கலாம். மாறாக ஹெட்போன்கள், இன்டர்காம் தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தலாம். செல்போன்களை பல இடங்களுக்கு எடுத்து செல்வதன் வாயிலாக தொற்று கிருமி பரவும் என்பதால், வெளியிடங்களிலும் அதை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். ஒருவர் தாம் பயன்படுத்தும் செல்போன்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதுதொடர்பாக, அரசு அமைப்புகளும், உலக சுகாதார நிறுவனமும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %