இந்தியாவில் கொரோனா தாக்குதல் புதிய உச்சம், பாதிப்பு 96 ஆயிரத்தையும், சாவு 3 ஆயிரத்தையும் தாண்டியது…

Read Time:4 Minute, 0 Second
Page Visited: 90
இந்தியாவில் கொரோனா தாக்குதல் புதிய உச்சம், பாதிப்பு 96 ஆயிரத்தையும், சாவு 3 ஆயிரத்தையும் தாண்டியது…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவில் தொடக்கத்தில் தினசரி கொரோனா வைரஸ் தாக்குதல் குறைவாகவே காணப்பட்டட்து. ஏப்ரல் இறுதியில் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்தை தாண்டியது. இதுவே, மே மாதம் தொடங்கியதும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் நேற்றும், இன்றும் இந்த எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை எட்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (மே 17) காலை மத்திய அரசு வெளியிட்ட தகவலில், 24 மணி நேரத்துக்குள் அதிகபட்சமாக 4,987 பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது இந்த கொரோனா என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே 18) மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,242 பேரை தாக்கியுள்ளது, 157 பேரின் உயிரை குடித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 96,169 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3,029 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது 56,316 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும், 36,824 பேர் குணம் அடைந்து உள்ளதாகவும் அரசு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில வரிசையில் மராட்டியம் தொடர்ந்து முதலிடம் பிடித்து உள்ளது. மராட்டியத்தில் 33,053 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1,198 பேர் உயிரிழந்துவிட்டனர். தமிழகம், டெல்லி, குஜராத்திலும் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33

ஆந்திரா – 2,407

அசாம் – 101

பீகார் – 1,262

சண்டிகார் – 191

சத்தீஷ்கார் – 86

தாதர் நகர் ஹவேலி – 1

டெல்லி – 10,054

கோவா – 29

குஜராத் – 11,379

அரியானா – 910

இமாச்சலப் பிரதேசம் – 80

ஜம்மு-காஷ்மீர் – 1,183

ஜார்க்கண்ட் – 223

கர்நாடகா – 1,147

கேரளா – 601

லடாக் – 43

மத்தியப் பிரதேசம் – 4,977

மராட்டியம் – 33,053

மணிப்பூர் – 7

மேகாலயா – 13

ஒடிசா – 828

புதுச்சேரி – 13

பஞ்சாப் – 1,964

ராஜஸ்தான் – 5,202

தமிழ்நாடு – 11,224

தெலுங்கானா – 1,551

திரிபுரா – 167

உத்தரகண்ட் – 92

உத்தரபிரதேசம் – 4,259

மேற்கு வங்காளம் – 2,677

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %