கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை… இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..!

Read Time:3 Minute, 39 Second

கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தக்கோரும் உலக சுகாதார நிறுவன தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவை தெரிவித்து உள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

உகானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், அதை சீனா மறுக்கிறது. இதற்கிடையே சில விஞ்ஞானிகளும் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லையெனவும் கூறுகின்றனர். சிலர் சீனாவை சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா உருவானது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குரல் கொடுத்து வருகிறார்.

சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில், கொரோனா தோன்றியது பற்றி விசாரணை நடத்தும் நிலைப்பாட்டை உலக சுகாதார அமைப்பு எடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், கொரோனா தொடர்பான உலக சுகாதார நிறுவன 73-வது கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. அதில், கொரோனா தோன்றியது குறித்து விசாரணை நடத்தக்கோரி, வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனாம் கிப்ரயிசஸ், கொரோனா தோன்றியது குறித்து விரைவில் உரிய நேரத்தில் சுதந்திரமான விசாரணையை தொடங்குவதாக கூறினார்.

கூட்டத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு தீர்மானத்தில், கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை உலக நாடுகள் பரிந்துரைக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற நோய் தாக்காதவாறு தடுக்க செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். உலக கால்நடை சுகாதார நிறுவனம், ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவற்றுடன் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டார். இந்த வரைவு தீர்மானத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, ரஷியா, மலேசியா உள்பட 60-க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %