ஊருக்குள் புகுந்து மனிதரை தாக்கிய சிறுத்தையை ‘கார்னர்’ செய்த தெருநாய்கள்…! வீடியோவை பார்க்க:-

Read Time:2 Minute, 30 Second

ஐதராபாத்தில் ஊருக்குள் புகுந்து மனிதர் ஒருவரை தாக்கிய சிறுத்தையை தெருநாய்கள் கார்னர் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மனிதர்கள் நடமாட்டம் வெளியே இல்லாத நிலையில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் சர்வசாதாரணமாக நடக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே இருந்து வீடியோவாக வெளியாகிவருகிறது.

சமீபத்தில் ஐதராபாத்தில் சாலையில் சிறுத்தையொன்று படுத்துக்கிடக்கும் வீடியோ வெளியாகியது. அதே ஐதராபாத்தில் தற்போது ஊருக்குள் புகுந்து மனிதர் ஒருவரை தாக்கிய சிறுத்தையை தெருநாய்கள் கார்னர் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை (மே 14) சாலையில் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்த இருதொழிலாளர்கள் பதறியடித்து தப்பிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேரமாவில் பதிவாகியுள்ளது. சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க இருவரில் ஒருவர் அங்கிருந்த லாரியில் ஏறிவிட்டார். மற்றொருவர் பூட்டியிருக்கும் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்கிறார். ஆனால், முடியவில்லை அவர் உடனடியாக லாரிக்குள் ஏற முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்குள் அங்கு வந்த சிறுத்தை அவருடைய காலை கவ்விவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காலை உதறி லாரியில் ஏறிவிட்டார்.

இதனையடுத்து சிறுத்தை அங்கிருந்து செல்ல மாற்றுவழியை தேடுகிறது. உடனடியாக அங்கிருந்த தெருநாய்கள் சிறுத்தையை கார்னர் செய்துவிட்டன. இதனையடுத்து அவைகளை விரட்ட முயற்சித்த சிறுத்தை லாரிக்கு அடியில் சென்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.