தமிழகத்தில் இதுவரையில் கொரோனாவுக்கு 709 குழந்தைகள் பாதிப்பு; மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனா பாதிப்பு குறித்து (மே 18) சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 536 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 364 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரையில் மொத்தமாக கொரோனாவுக்கு 11 ஆயிரத்து 760 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பெண்கள் கொரோனா தொற்றல் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனையில் 4 ஆயிரத்து 508 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், விமான நிலைய முகாமில் இருந்தவர்களில் மேலும் 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 709 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 871 முதியவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 537 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 500-ஐ கடந்த 3-வது மாவட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பு தமிழக அரசு அறிவிப்பு; விவசாயிகளுக்கு அறிவுரை

Tue May 19 , 2020
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை