‘கொரோனாவுடன் போராட முடியாமல் எங்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள்’.. சீனா பாய்ச்சல்!

Read Time:3 Minute, 46 Second
Page Visited: 123
‘கொரோனாவுடன் போராட முடியாமல் எங்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள்’.. சீனா பாய்ச்சல்!

கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. கொரோனா வைரஸை உருவாக்கியதே சீனாதான் என குற்றம் சாட்டும் அமெரிக்கா, இவ்விவாகாரத்தில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக தொடர்ந்து புகார் கூறி வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதி உதவியையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோமுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அனல் பறக்கும் கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதி உள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் 30 நாளில் சீனாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்துக்காட்ட வேண்டும், அப்படி செய்யாவிட்டால், அந்த நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினராகவும் தொடர மாட்டோம் என கெடு விதித்துவிட்டார். இது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

சீன வெளியுறவுத்துறை

இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பேசுகையில், உலக சுகாதார நிறுவன தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி எழுதியுள்ள கடிதம் தெளிவற்ற வெளிப்பாடுகளால் நிரம்பியிருக்கிறது.

சீனா மீது அவதூறு பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவதில் அமெரிக்கா திறமையற்று செயல்பட்டுக்கொண்டு, சீனா மீது பழிபோட முயற்சி செய்கிறது.

கொரோனா தொற்று இப்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் பரவி வருகிறது. எனவே, அமெரிக்க அரசியல்வாதிகள் பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனத்துக்கான உறுப்பு நாடுகள் நிதி பங்களிப்பை உறுப்பு நாடுகள் கூட்டாக செய்கின்றன. இது அமெரிக்காவால் மட்டும் தீர்மானித்து விட முடியாது.

உலக சுகாதார நிறுவனத்துக்கு உரிய பங்களிப்புகளை சரியான நேரத்தில் செலுத்துவது என்பது உறுப்பு நாடுகளின் கடமை ஆகும். நிதியை நிறுத்துவேன் என்று ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா அச்சுறுத்துவது என்பது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அதன் சர்வதேசக்கடமையை அமெரிக்கா மீறும் செயலாகும் எனக் கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %