இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 லட்சத்தை எட்டியது; இதுவரையில் காணாத வகையில் தினசரி பாதிப்பு, உயிரிழப்பு அதிகரிப்பு…

Read Time:2 Minute, 38 Second

இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

மே மாதம் தொடங்கியதும் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது 3 ஆயிரத்தை எட்டியது. பின்னர் இந்த எண்ணிக்கையானது 4 ஆயிரத்தையும், 5 ஆயிரத்தையும் எட்டிவருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100-ல் இருந்து 1 லட்சத்தை, 64 நாட்களில் எட்டியுள்ளதாக நேற்று (மே 19) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்துக்குள் 4,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 134 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதுவரையில் இந்தியா காணாத தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகும். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,750 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 3,303 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42,298 ஆக உயர்ந்துள்ளது. 61,149 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 37,136 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு 24 மணி நேரங்களில் மட்டும் 2000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகம் மற்றும் குஜராத்தில் அதிகமான தொற்று பதிவாகியுள்ளது.

மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33

ஆந்திரா – 2,532

அசாம் – 142

பீகார் – 1,498

சண்டிகார் – 200

சத்தீஷ்கார் – 101

தாதர் நகர் ஹவேலி – 1

டெல்லி – 10,554

கோவா – 46

குஜராத் – 12.140

அரியானா – 964

இமாச்சலப் பிரதேசம் – 92

ஜம்மு-காஷ்மீர் – 1,317

ஜார்க்கண்ட் – 231

கர்நாடகா – 1,397

கேரளா – 642

லடாக் – 43

மத்தியப் பிரதேசம் – 5,465

மகாராஷ்டிரா – 37,136

மணிப்பூர் – 9

மேகாலயா – 13

ஒடிசா – 978

புதுச்சேரி – 18

பஞ்சாப் – 2,002

ராஜஸ்தான் – 5,845

தமிழ்நாடு – 12,448

தெலுங்கானா – 1,634

திரிபுரா – 173

உத்தரகண்ட் – 11

உத்தரபிரதேசம் – 4,926

மேற்கு வங்காளம் – 2,961