இந்தியாவில் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.12 லட்சமாக உயர்வு!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 3 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு மத்தியில் பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 5 ஆயிரம் தாண்டி செல்கிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 112,359 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 132 பேர் இந்த வைரசால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,435 ஆக அதிகரித்துள்ளது. பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42,000-த்தை தாண்டியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 63,624 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 39,297 பேரை நோய் பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து 13,191 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனா 11,000-க்கும் மேற்பட்டவர்களை பாதிக்க செய்துள்ளது.

மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33

ஆந்திரா – 2,602

அசாம் – 170

பீகார் – 1,674

சண்டிகார் – 202

சத்தீஷ்கார் – 115

தாதர் நகர் ஹவேலி – 1

டெல்லி – 11,088

கோவா – 50

குஜராத் – 12,537

அரியானா – 983

இமாச்சலப் பிரதேசம் – 110

ஜம்மு-காஷ்மீர் – 1,390

ஜார்க்கண்ட் – 231

கர்நாடகா – 1,462

கேரளா – 666

லடாக் – 44

மத்தியப் பிரதேசம் – 5,735

மகாராஷ்டிரா – 39,297

மணிப்பூர் – 25

மேகாலயா – 14

ஒடிசா – 1,052

புதுச்சேரி – 18

பஞ்சாப் – 2,005

ராஜஸ்தான் – 6,015

தமிழ்நாடு – 13,191

தெலுங்கானா – 1,661

திரிபுரா – 173

உத்தரகண்ட் – 122

உத்தரபிரதேசம் – 5,175

மேற்கு வங்காளம் – 3,103

Next Post

கொரோனா வைரசால் இறந்தவர்கள் உடலை கையாளும்போது தொற்று ஏற்படுமா...?

Thu May 21 , 2020
கொரோனா வைரஸ் தொற்று தாக்கி மனிதர்களுக்கு நேரிடுகிற இறப்புகளில் பல்வேறு கேள்விகள் எழுகிறது. இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே உடலை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐ.சி.எம்.ஆர்.) தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றால் இறந்தவர்கள் உடல்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழ்வது படிப்படியாக குறைகிறது. இருப்பினும் ஒரு உடல், தொற்று இல்லாத உடல் என அறிவிப்பதற்கு இப்போது காலவரையறை […]

அதிகம் வாசிக்கப்பட்டவை