இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 40 சதவீதமாக உயர்வு – மத்திய அரசு

Read Time:3 Minute, 54 Second
Page Visited: 129
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 40 சதவீதமாக உயர்வு – மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு செல்வோர் எண்ணிக்கை 40.32 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தல் உள்ளிட்ட முடிவுகள், கையாண்ட வழிமுறைகள் குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், ஊரடங்கு காலத்தை மத்திய அரசு மிகுந்த ஆக்கபூர்வமாகவே கையாண்டு, சுகாதார கட்டமைப்பை அதிகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 45 ஆயிரத்து 299 பேர் குணமடைந்து உள்ளனர். இது 40.32 சதவீதம் ஆகும். மே 21-ம் தேதிவரை 21 லட்சத்து 15 ஆயிரத்து 920 மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 532 பேருக்கு 555 பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் அளவு ஆயிரம் மடங்கு அதிகரித்து உள்ளது.

ஐசிஎம்ஆர்(ICMR), சுகாதாரத்துறை மற்றும் தேசிய நோய்த் தடுப்பு மையம் ஆகியவற்றின் ஆதரவுடனும், மாநில அரசுகளின் சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் 3 ஆயிரத்து 27 கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

7 ஆயிரத்து 13 மையங்கள் கொரோனா சுகாதார மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. 2.81 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள், 31 ஆயிரத்து 250 ஐசியு படுக்கை வசதிகள், 11 ஆயிரத்து 387 ஆக்சிஜன் வழங்கும் வசதியுடைய படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் 65 லட்சம் பிபிஇ கவச உடைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு கோடியே 10 லட்சம் என். 95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டிலேய நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பிபிஇ கவச உடைகளும், 3 லட்சம் என். 95 முகக்கவசங்களும் தயார் செய்யப்படுகிறது. ஆனால், கொரோனாவுக்கு முன் இதுபோல் உற்பத்தி செய்யப்படவில்லை. அனைத்துவிதமான தொற்று நோய் தடுப்பு வல்லுநர்களுடனும் மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஆலோசித்து வருகிறது.

இதுவரை என்டிஎப் எனப்படும் தேசிய நோய்த் தடுப்புப் படையும், ஐசிஎம்ஆர் அமைப்பும் 20 ஆலோசனை கூட்டங்கள் நடத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றன என தெரிவித்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %