கொரோனா ஊரடங்கில் வேலைக்கு செல்பவரா நீங்கள்…? என்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்…

Read Time:5 Minute, 16 Second

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது இம்மாதம் 31-ம் தேதி வரை 4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கால் குறைந்த எண்ணிக்கை ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில் மே 18-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று தனியார் நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பணிக்கு செல்லும் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பம் பலரது மத்தியிலும் நிலவுகிறது. ஒரு அச்சம் சூழ்ந்த நிலையிலே பணியை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்…

* உங்களுடைய வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதே முகக்கவசம் அணிந்துக்கொள்ளுங்கள்.


* உங்களுடன் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகளை வைத்துக்கொள்ளுங்கள்.


* உங்கள் அலுவகத்தால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பேருந்து, காரில் நீங்கள் பயணம் செய்தால், அதனுடைய கதவு கைப்பிடிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் கிருமி நாசினியை அதில் தெளித்துக்கொள்ளலாம். இளைஞர்கள் கைப்படியை பயன்படுத்துவதை பெரும்பாலும் தவிருங்கள்…


* பெரும்பாலும் முகக்கவசம் அணிந்து இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதனை அணிய முடியாத நேரத்தில் ஜிப் லாக் பயன்படுத்தி மூடிவையுங்கள்.


* அலுவலகத்தில் உங்கள் கேபினை அடைந்தும் வேலையை தொடங்குவதற்கு இப்போது எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கும்.


* அலுவலகத்திற்குள் செல்வதற்குள் வெப்பநிலை எவ்வளவு உள்ளது என்பதை சோதித்துக்கொள்ளுங்கள்.


* உங்களுடைய கைகளை சுத்தமாக சோப்பினால் கழுவிக்கொள்ளுங்கள்.


* லிஃப்ட் பட்டன்கள், கதவு கைப்பிடிகள் மற்றும் பயோமெட்ரிக் அமைப்பு போன்று அனைவரும் தொடும் பகுதியை நீங்கள் தொடுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் மேஜையில், மானிட்டர், கி-போர்ட்டு மற்றும் அலுவலகத்தில் நீங்கள் தவறாமல் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்வதை உறுதிசெய்துக்கொள்ளுங்கள்.


அலுவலகத்தில் எதையெல்லாம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.


* எப்போதும் முகக்கவசம் அணிந்திருப்பது.


* ஒருவரிடம் இருந்து 6 அடி தொலைவில் நிற்பது.


* உடன் பணிபுரிபவர்களுடன் கை குலுக்குவது, அரவணைப்பதை தவிர்ப்பது.


* பெரும்பாலும் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பது.


* 2-3 முறையாவது கைகளை சோப்பினால் 20 நொடிகள் கழுவுவது.


வீட்டுக்கு திரும்பியதும் உங்களையும், உங்களுடைய உறவினர்களையும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். வீட்டிற்கு வந்ததும் நேராக குளியலறையில் சென்று உங்கள் கைகளை குறைந்தது 20 விநாடிகள் கழுவுங்கள். மேலும், உங்கள் முகக்கவசம் மீண்டும் பயன்படுத்துவதாக இருந்தால் கொதிக்கும் நீரில் போட்டுவிடுங்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து காய வையுங்கள்.

நீங்கள் கொண்டு செல்லும் பை, பேக், சாவி, பர்ஸ் மற்றும் நீங்கள் தினசரி அடிப்படையில் தவறாமல் பயன்படுத்தும் பொருட்கள அனைத்தையும் சுத்தப்படுத்துவதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்து கொல்லாம். பெரும்பாலும் தேவையான பொருட்களை மட்டுமே உடன் வையுங்கள்.