இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள்…!

Read Time:3 Minute, 35 Second
Page Visited: 124
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள்…!

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 5,197,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 334,675 ஆக உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குவதில் ஆண் என்றும், பெண் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. இரு பாலரையும் சமமாகத்தான் தாக்குகிறது. இருப்பினும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதும், அதிக உயிரிழப்பை சந்திப்பதும் ஆண் இனம்தான் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வயதான ஆண்கள்தான் கொரோனா தொற்றுநோய் தாக்குகிறபோது, அதிலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுடன், கொரோனாவும் அழையா விருந்தாளியாக வந்து தாக்குகிறபோது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற நேரிடுகிறது. எனவே, அவர்களில் ஏற்படுகிற உயிர்ப்பலியும் அதிகமாகத்தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது உலக அளவில் தெளிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம்பேர் ஆண்கள், 36 சதவீதம்பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 435 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 64 சதவீதம்பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். வயது அடிப்படையில் கணக்கிட்டால் 0.5 சதவீதம்பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 2.5 சதவீதம்பேர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 11.4 சதவீதம்பேர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

35.1 சதவீதம்பேர், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். 50.5 சதவீதம்பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 73 சதவீதம்பேர், வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்களாவர். உலகளாவிய கொரோனா இறப்பு விகிதம் 6.65 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவில் இவ்விகிதம் 3.06 சதவீதம்தான். உரிய நேரத்தில் கொரோனா நோயாளிகளை கண்டறிவதும், முறையான சிகிச்சை அளிப்பது மட்டும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம். குணமடைபவர்கள் விகிதம் 40.32 சதவீதமாக அதிகரித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவேதான் கொரோனா வைரஸ் பாதித்த ஆண்கள், அதிலும் வயதான ஆண்கள் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்பது அவசியமாகுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %