கொரோனா வைரஸ் இந்தியாவில் 2-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கியிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையானது 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், 24 மணி நேரத்துக்குள் புதிதாக 6,088 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாட்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5,611 ஆகவும், 5609 ஆகவும் இருந்தது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359-ல் இருந்து 118,447 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் சுமார் 40 சதவீதம் பேர், அதாவது 48,000 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியம், தமிழகம் மற்றும் டெல்லியில் அதிகமான பாதிப்புக்கள் தொடர்ந்து பதிவாகிய வண்ணம் உள்ளது.
புதிதாக இந்த வைரஸ் தொற்றால் 150 பேர் பலியாகி உள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,583. ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 64 பேர் 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66,330ஆக உள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு 1454 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 2,647
அசாம் – 203
பீகார் – 1,982
சண்டிகார் – 217
சத்தீஷ்கார் – 128
தாதர் நகர் ஹவேலி – 1
டெல்லி – 11,659
கோவா – 52
குஜராத் – 12,905
அரியானா – 1,031
இமாச்சலப் பிரதேசம் – 152
ஜம்மு-காஷ்மீர் – 1,449
ஜார்க்கண்ட் – 290
கர்நாடகா – 1,605
கேரளா – 690
லடாக் – 44
மத்தியப் பிரதேசம் – 5,981
மகாராஷ்டிரா – 41,642
மணிப்பூர் – 25
மேகாலயா – 14
ஒடிசா – 1,103
புதுச்சேரி – 20
பஞ்சாப் – 2,028
ராஜஸ்தான் – 6,227
தமிழ்நாடு – 13,967
தெலுங்கானா – 1,699
திரிபுரா – 173
உத்தரகண்ட் – 146
உத்தரபிரதேசம் – 5,515
மேற்கு வங்காளம் – 3,197