பாகிஸ்தானில் 98 பேருடன் விபத்துக்குள் சிக்கிய விமானத்தின் கடைசி நிமிடங்கள்… வீடியோவை பார்க்க:-

Read Time:1 Minute, 27 Second

பாகிஸ்தானில் லாகூரிலிருந்து 90 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 98 பேருடன் இன்று புறப்பட்டு அந்நாட்டு ஏர்லைன்ஸ் விமானம் கராச்சியில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.

விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, தரையிறங்க முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே விமானம் வானில் பறந்துக்கொண்டு தாழ்வாக சென்று குடியிருப்பு பகுதியில் மோதி விபத்தில் சிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. விமானம் மோதியதும் புகை வெளியாவது அதில் இடம்பெற்றுள்ளது.