அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.!

Read Time:2 Minute, 47 Second
Page Visited: 352
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அயோத்தி அறக்கட்டளையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இதற்காக அறக்கட்டளை (ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா) ஒன்றை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. அந்த அறக்கட்டளை, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கோவில் கட்டுவதற்காக அயோத்தியில் மிகப்பெரிய எந்திரங்களுடன் நிலத்தை சமப்படுத்தும் கட்டுமானப்பணிகள் மே 11-ம் தேதி தொடங்கியது.

அப்போது 5 அடி சிவலிங்கம், 7 கருப்புத்தூண்கள், 6 செம்மணற்கல் தூண்கள், மற்றும் தெய்வங்கள், பெண் தெய்வங்களின் உடைந்த சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. மேலும், அறக்கட்டளை கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளது. கோவில் கட்டுவதற்கான பணிகள் ஊரடங்கு முடிந்த பிறகு வேகம் ப்பிடிக்கும் என்று தெரிகிறது, அறக்கட்டளை தன் உறுப்பினர்களுடன் ஊரடங்கு முடிந்தவுடன் பேச்சு நடத்த கூட்டம் கூட்டும்.

இதற்கிடையே பவுத்தர்கள் குழு ஒன்று ராமஜென்ம பூமியில் ஏற்கெனவே பவுத்த ஸ்தூபி இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே பெரிய பெரிய எந்திரங்கள் மூலம் நிலம் சமப்படுத்தும் பணி நடக்கக் கூடாது என்றும் இது தங்கள் ஆதாரங்களை அழித்து விடும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து இருக்கிறது.

பவுத்தப் பிரிவை சேர்ந்த வினீத் மௌரியா என்பவர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்டுள்ளார், அவர் தற்போது கூறுகையில், இந்த சிவலிங்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு செய்யவிருப்பதாக தெரிவித்தார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %