இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு!

Read Time:3 Minute, 54 Second
Page Visited: 125
இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு;  ஒரே நாளில்  6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  125,101 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று (மே 23) கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 6,600 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதற்கு முன்னதாக நேற்று 6088 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்தது.

இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இம்மாத தொடக்கத்தில் 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் பின்னர் 5 ஆயிரமாக சென்று இப்போது 6 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. புதிதாக ஏற்பட்ட பாதிப்புடன் சேர்த்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 125,101ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் 137 பேரின் உயிரையும் ஒரே நாளில் பறித்து இருக்கிறது.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,720 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று பதிவான உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மராட்டியத்தில் மட்டும் 63 பேர் கொரோனா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 69,597 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மராட்டியத்தில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. மும்பையில் மட்டுமே 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் புதியதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உள்ளது. குஜராத் மற்றும் டெல்லி மாநிலங்கள் அதிகமான பாதிப்புகளை கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மாந்நிலங்கள் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33

ஆந்திரா – 2,709

அசாம் – 259

பீகார் – 2,177

சண்டிகார் – 218

சத்தீஷ்கார் – 172

தாதர் நகர் ஹவேலி – 1

டெல்லி – 12,319

கோவா – 54

குஜராத் – 13,268

அரியானா – 1,067

இமாச்சலப் பிரதேசம் – 168

ஜம்மு-காஷ்மீர் – 1,489

ஜார்க்கண்ட் – 308

கர்நாடகா – 1,743

கேரளா – 732

லடாக் – 44

மத்தியப் பிரதேசம் – 6,870

மராட்டியம் – 44,582

மணிப்பூர் – 26

மேகாலயா – 14

ஒடிசா – 1,189

புதுச்சேரி – 26

பஞ்சாப் – 2,029

ராஜஸ்தான் – 6,494

தமிழ்நாடு – 14,753

தெலுங்கானா – 1,761

திரிபுரா – 175

உத்தரகண்ட் – 153

உத்தரபிரதேசம் – 5,735

மேற்கு வங்காளம் – 3,332

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %