வீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..!

Read Time:1 Minute, 47 Second

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வெளியே வராத காலத்தில் வனவிலங்குகள் மகிழ்ச்சியாக வெளியே வரத்தொடங்கின. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இச்சம்பவம் நிகழ்ந்தது. உலகம் முழுவதும் இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து இல்லாத காரணங்களால் சாலைகளில் வனவிலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடின. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் மயில்கள் தோகையை விரித்தாடி ஒரு “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவருடைய கண்களுக்கும் விருந்தளித்து உள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கேசவன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், வெறிச்சோடிய சாலையில் மயில்களின் மந்தையாக நின்று “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவானது எங்கு எடுக்கப்பட்டது என்பது துல்லியமாக தெரியவரவில்லை.

இந்திய தேசியப்பறவைகள் ஆனந்தமாக நடனமாடும் இந்த வீடியோ ராஜஸ்தானில் எங்கோ எடுக்கப்பட்டுள்ளது என கேசவன் தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து உள்ளனர். பலரும், மகிழ்ச்சியை ரீடுவிட்டாக தெரிவித்து உள்ளனர்.