இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முதலில் மார்ச் 25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து மே 17-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்து பிறப்பிக்கப்பட்ட 31-ம் தேதி வரையிலான 4 கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே இருக்கிறது. இருப்பினும் கொரோனா வைரசின் ஆட்டம் நின்றபாடாக தெரியவில்லை.
குறிப்பாக தொடர்ந்து 6 நாட்களாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 6,977 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியல், புதிதாக கொரோனா தொற்றால் 6,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டுகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 151,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 170 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 4,337 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் குணமடைந்துள்ளதாகவும், 83,004 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் உயிரிழந்த 170 பேரில், 60 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் அதிகப்பட்சமாக மராட்டியத்தில் மட்டும் 54,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டுமே 30,000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 3,171
அருணாச்சல பிரதேசம் – 2
அசாம் – 616
பீகார் – 2,983
சண்டிகார் – 266
சத்தீஷ்கார் – 361
தாதர் நகர் ஹவேலி – 2
டெல்லி – 14,465
கோவா – 67
குஜராத் – 14,821
அரியானா – 1,305
இமாச்சலப் பிரதேசம் – 247
ஜம்மு-காஷ்மீர் – 1,759
ஜார்க்கண்ட் – 426
கர்நாடகா – 2,283
கேரளா – 963
லடாக் – 53
மத்தியப் பிரதேசம் – 7,024
மராட்டியம் – 54,758
மணிப்பூர் – 39
மேகாலயா – 15
நாகாலாந்து – 4
ஒடிசா – 1,517
புதுச்சேரி – 46
பஞ்சாப் – 2,160
ராஜஸ்தான் – 7,536
தமிழ்நாடு – 17,728
தெலுங்கானா – 1,991
திரிபுரா – 2017
உத்தரகண்ட் – 401
உத்தரபிரதேசம் – 6,548
மேற்கு வங்காளம் – 4,009