விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன ‘அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம்’ விளக்கம்..!

Read Time:6 Minute, 23 Second
Page Visited: 135
விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன ‘அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம்’ விளக்கம்..!

இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் பறக்கத்தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், விமானங்களில் பறக்கிற போது கொரோனா வைரஸ் பரவுமா? விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? என்ற கேள்விகள் அனைவரிடமும் எழுந்து உள்ளது.

இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) அளித்து உள்ள பதில்.

பரவாது என்பதே…

விமானங்களில் பறக்கிறபோது பெரும்பாலும் வைரஸ்களும், பிற கிருமிகளும் எளிதில் பரவுவதில்லை. அதே நேரத்தில் விமானங்களில் பயணிக்கிறவர்கள் இறங்கிய உடனே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மையம் பரிந்துரை செய்துள்ளது.

இதையொட்டி அந்த மையம் கூறும் முக்கிய தகவல்கள் வருமாறு:-

  • கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், விமானத்தில் பறக்கிறவர்கள் ஆபத்து இல்லாதவர்கள் என்று கூற முடியாது. எனவே முடிந்தவரை விமான பயணங்களை தவிர்க்க வேண்டும். விமான பயணத்தின் போது, விமான நிலையங்களில் கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. இது பயணிகளை மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்புக்கு வழி நடத்துகிறது. மற்றவர்கள் தொட்ட மேற்பரப்புகளையும் தொட வேண்டியது வரும்.
  • மக்கள் நெரிசல் மிகுந்த விமானங்களில், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது மிகவும் கடினம். 6 அடி தொலைவுக்குள் உட்கார வேண்டியது வரலாம். மணிக்கணக்கில் உட்காரும் நிலை இருக்கும். இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கும்.

பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.

  • அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் பயணிக்கிறவர்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக ஆரோக்கியம், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • எந்த ஒரு பயணியும் காய்ச்சல், தொடர் இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளில் தவிக்கிற போது விமான சிப்பந்திகள் அந்த பயணி குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திடம் (சிடிசி) தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • விமானம் புறப்படுவதுக்கு முன் மற்றும் பின்னர், தொற்று நோய் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ளவும், நோய்வாய்ப்பட்ட பயணிகளை கவனித்துக்கொள்ளவும், அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்யவும், விமான நிறுவனங்கள், சிப்பந்திகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மிக முக்கியமான ஆலோசனை, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் கை கழுவ வேண்டும். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்த பின்னர் அல்லது அசுத்தமான உடல் திரவங்கள் அல்லது மேற்பரப்புகளை தொட்ட பின்னர் சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாவிட்டால், ஆல்கஹால் சேர்ந்த சுத்திகரிப்பு திரவம் (சானிடைசர்) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  • விமான நிறுவனங்கள், விமானி அறையிலும், பிற சிப்பந்திகளுக்கும் அவர்களது தனிப்பட்ட உபயோகத்துக்கு சானிடைசர் திரவம் வழங்க வேண்டும்.

விமான நிறுவனங்கள் நோய்வாய்ப்பட்ட நபரை 2 மீட்டர் தொலைவுக்கு பிரித்து வைத்து அவருக்கு சேவை செய்ய ஒரு குழு உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நோய்வாய்ப்பட்ட நபர் பொறுத்துக்கொள்வாரேயானால் ஒரு முக கவசமும் வழங்க வேண்டும்.

முக கவசம் இல்லை என்றாலோ நோய் வாய்ப்பட்ட நபர் அணிய சிரமப்பட்டாலோ, அவர் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை ‘திசு காகிதம்’ கொண்டு மூடிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பயணிகளிடம் எந்த ஒரு நோய் தொற்று அறிகுறியும் காணப்படவில்லை என்றாலும், விமானங்களை சுத்தம் செய்தல், திடக்கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுய பாதுகாப்பு கவசங்களை அணிதல் போன்ற வழக்கமான இயக்க முறைகளை விமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.

அறிகுறிகளுடன் கூடிய பயணிகளை கண்டறிந்தால், உடனடியாக மேம்பட்ட துப்புரவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இருக்கை, இருக்கை பெல்ட்டு, அந்த பயணியின் 6 அடி தொலைவில் எல்லா பக்கமும் சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %