ஊரடங்கு காலத்திலும் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் பத்திரபதிவு துறை..!

Read Time:3 Minute, 15 Second
32 Views
ஊரடங்கு காலத்திலும் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் பத்திரபதிவு துறை..!

ஊரடங்கு காலத்திலும் விரைவாக செயல்படுவதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு பத்திர பதிவு மூலம் வரும் வருவாயின் அளவு உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் பத்திரபதிவுத் துறையில், சொத்துக்கள், சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், திருமணம் போன்றவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மாநில அரசுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித் தரும் துறையாக பத்திரபதிவுத் துறை விளங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 578 துணை பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான ஆவணங்களும் இந்த அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2006-07-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 24.93 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.3 ஆயிரத்து 407 கோடியை வருவாயாக அரசு ஈட்டியிருந்தது. அதன் பிறகு பல ஏற்ற, இறக்கங்களை கண்டிருந்தாலும், 2018-19-ம் ஆண்டில் 25.73 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரத்து 71 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருந்தது பத்திரபதிவுத் துறை.

இந்தநிலையில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் 24-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு உத்தரவு இதுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு நிபந்தனைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கினை கடைப்பிடித்து வரும் சூழலில், கடந்த ஏப்ரல் 20-ந் தேதியில் இருந்து துணை பதிவாளர் அலுவலகங்கள் இயங்குவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் துணை பதிவாளர் அலுவலகங்களை இயக்காமல், அருகில் இருக்கும் அலுவலகங்களுக்கு அதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட்டுள்ளன.

தற்போது வருவாய் ஈட்டுவதில் துணை பதிவாளர் அலுவலகங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. கடந்த ஏப்ரல் 27-ந் தேதி கணக்குப்படி 1,338 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.4.04 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. மே 27-ந் தேதி கணக்குப்படி, 11 ஆயிரத்து 309 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு ரூ.46.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் இனி வரும் காலகட்டங்களில் வெகுவாக உயரும் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %